Header Ads



3 வாரங்களுக்கு பாராளுமன்றத்தை முடக்கினார் ஜனாதிபதி - மகிந்தவுக்கு பலத்தை பெற்றுக்கொடுக்க திட்டம்

நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ளார்.

இதற்கமைய, 3ஆவது கூட்டத்தொடரை, நவம்பர் 16ஆம் திகதி ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளாரென, நாடாளுமன்ற உத்தியோகபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் திங்கட்கிழமை கூடினால் சிலவேளைகளில் மகிந்தவினால் பாராளுமன்றத்தில் பலத்தை காண்பிக்க முடியுமா என்ற சந்தேகம் நிலவியது.

இந்நிலையில் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்து தாமதிப்பதன் மூலம் மகிந்தவுக்கு 2 வாரங்களுக்குள் பலத்தை பெற்றுக் கொள்ளவே மைத்திரி இவ்வாறு பாராளுமன்றத்தை ஒத்திவைத்ததாகவும் கூறப்படுகிறது.

2 comments:

  1. But it's a Troubled Honeymoon?

    ReplyDelete
  2. புதுமணத்தம்பதிகள் புதிது புதிதாக ஏதாவது செய்யலாம். பெற்றோல் விலை குறையலாம், சம்பளம் அதிகரிக்கப்படலாம். சீனாவிலிருந்து அனைத்தும் வரலாம். சிலவேளைகளில் சீனாவின் ஒரு நகரமாகக்கூட வரலாம். அப்படி வந்தால் சீனப்பெருஞ்சுவரையாவது போய் பார்த்துவிட்டு வரலாமில்லை.. ஹஹஹ..

    ReplyDelete

Powered by Blogger.