மரிக்கார் விடுத்துள்ள சவால்
பொது எதிரணியினரால் மாற்று அரசாங்கத்தையோ அல்லது புதிய அரசாங்கத்தையோ உருவாக்க முடியாது. மாற்று அரசாங்கத்துக்கு பதிலாக முடியுமானல் பாராளுமன்றத்தில் 113 பெரும்பான்மையை பெற்று புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு கூட்டு எதிரணியினரிடம் ஐக்கிய தேசிய கட்சி சவால் விடுத்துள்ளது.
மாற்று அரசாங்கத்திற்கான விளக்கம் தெரியாதவர்கள் அதனை நடைமுறைப்படுத்த எத்தனித்தால் அது தோல்வியிலேயே முடிவடையும்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் ஏற்பட்டுள்ள பிலவுகளை சமாளிப்பதற்காகவும் தம்மீதான நீதிமன்ற விசாரணைகளில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காகவே எதிரணியினர் மாற்று அரசாங்கத்தை உருவாக்குவதாக போலி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
Post a Comment