ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை, மூடிவிடுமாறு சம்பிக்க அறிவுரை
தொடர்ந்து நட்டத்தில் இயங்கும் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தை மூடிவிட்டு, அங்கு பணிபுரியும் 7000 பணியாளர்களுக்கு நட்டஈட்டை பெற்றுக்கொடுப்பது சிறந்ததென, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் கடந்த மார்ச் 31ஆம் திகதி வரை 18,400 கோடி ரூபாயும் மிஹின் லங்கா நிறுவனம் 1900 கோடி ரூபாயும் நட்டமடைந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், குறித்த இரண்டு நிறுவனங்களும் 20,000 கோடி ரூபாய் வரை நட்டமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் 3500 கோடி ரூபாய் வரை நட்டமடையும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சகல தனிநபரையும் கடன்காரர்களாக மாற்றியுள்ள ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் தொடர்ந்து இயங்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்க வேண்டுமெனவும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்
Mr. Minister closing the airline is not a solution & if close the airline it will total shame full for the nation! Have lot of alternative ways which is done early with Emirates! But you never accepting these solutions because major oil country's airlines from Arab nations!! You will accept only when your u.s boss say some commands!
ReplyDelete