Header Ads



பாராளுமன்றத்தில் பலத்தை, நிரூபிப்பது யார்..? (முழு விபரம் இணைப்பு)


கள நிலவரம். ........

ஐக்கிய தேசிய முன்னணி -107-5=102

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு -95+01+05=101

தமிழ் தேசிய கூட்டமைப்பு -16

மக்கள் விடுதலை முன்னணி -06

பாராளுமன்றத்தில் 113 ஆசனங்களை பெற்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இரண்டு அணிகளுக்குமே உள்ளது, தற்போதைய நிலவரப்படி சம நிலை தன்மையை காணப்படுகிறது,

மக்கள் விடுதலை முன்னணி எந்த அணியிலும் சேராமல் சுயாதீனமாக செயற்பட முடிவு செய்துள்ளது,

இதன் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வகிபாகம் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது, இவர்களின் ஆதரவு இரண்டு அணிக்குமே தேவையானது எனினும் இவர்கள் இன்னும் தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

ஐக்கிய தேசிய முன்னணியில்.. . 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC)-07

தமிழ் முற்போக்கு கூட்டணி (TPA )-06

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC)-05

ஜாதிக ஹெல உறுமய (JHU)-02

இந்த நான்கு கூட்டணி பங்காளிகளில் அல்லது ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்தவர்களில் யாரேனும் 12 பேரின் ஆதரவு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு தேவைப்படுகிறது,

ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியை தொடர வேண்டுமானால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு தேவை படுகிறது அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து 11 உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய முன்னணியில் சேர வேண்டும்.

பாராளுமன்றம் கூட்டப்படும் வரை பேரம் பேசும் படலம் தொடரும். . . . .

Chandru Kumar

2 comments:

  1. மரம், மயில் ஆகிய கட்சிகளின் ஆதரவு தற்போது UNP க்கு என அறிவித்துள்ளன.

    எனினும், ஒரு கேள்வி:- “இவைகள் UNP யுடன் சேர்த்தே கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டன எனவும், எனவே, அவர்களுக்கு விருப்பமோ, இல்லையோ UNP க்கு தான் ஆதரவு அளிக்கவேண்டிய கட்டாயம்” என ஒரு ஆங்கில இணையத்தில் ஒரு சிங்களவர் கருத்து எழுதியிருக்கிறார், இது உண்மையா?

    ReplyDelete
  2. இவ்வாறான ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பிரதான முஸ்லிம் கட்சிகள் இரண்டும் மகிந்தவுடன் சேர்ந்து கொள்வதே உசிதம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. காரணம், மகிந்தவை 'தனிச்சிங்கள' ஆட்சியொன்றை இவ்வாறான இக்கட்டான நிலையில் ஏற்படுத்த அனுமதிப்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். ஏற்கனவே எங்களுடன் அதீத கோபத்தில் இருக்கும் மகிந்த, பிரதான முஸ்லிம் கட்சிகளின் உதவி மறுக்கப்பட்ட நிலையில் தனிச்சிங்கள ஆட்சி அமைப்பாராயின், பழிவாங்கல்கள் இடம்பெறக்கூடும். அடுத்த பொதுத்தேர்தலில் மகிந்த சார்பு கட்சி வெற்றி பெறும் என்பது வெள்ளிடை மலை. இந்நிலையில் பழிவாங்கல்கள் தொடர்ச்சியாக இடம்பெறக்கூடும். நாமும் ஆட்சியின் பங்குதாரராக இருக்கும் பட்சத்தில் சிறிதளவேனும் ஒரு பிடி இருக்கும். மகிந்தவை எதிர்க்கட்சியிலிருந்து கூக்குரலிட்டு எதுவும் செய்யமுடியாதென்பது சிறுபிள்ளையும் அறியும். சிலரை எதிரியாக வைத்திருப்பதை விட அருகில் வைத்திருப்பதே பிழைப்புக்கு (survival) உசிதம். மகிந்தவும் அப்படியான ஒருத்தரே. கட்சி மாறுவதென்பது எங்கள் அரசியல்வாதிகளுக்கு அல்வா சாப்பிடுவது போல. அதிலும் அமைச்சுப்பதவி, மில்லியன் கணக்கில் பணம் என்றால் பாய்ந்தடித்து போவார்கள். இருந்தும் இச்சந்தர்ப்பத்தில் அதுவே சரியான முடிவும் கூட என்பது எனது பணிவான கருத்து.

    ReplyDelete

Powered by Blogger.