மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள, பலத்த சந்தேகம்
நாட்டின் அரசியல் நிலைமை குறித்து பேச எனக்கு விருப்பமில்லை. நாட்டில் அரசாங்கம் என்ற ஒன்று காணப்படுகின்றதா என்றே சந்தேகமாகவுள்ளது. ஜனாதிபதி பிரதமரை திட்டுவதும் பிரதமர் ஜனாதிபதியை திட்டுவதும் அமைச்சர்கள் தங்கள் இஷ்டபடி நடப்பதும் என்று நாடு செல்கின்றது. இவ்வாறு பொறுப்புவாய்ந்தவர்கள் நடந்துக்கொள்ளும் விதத்தில் நாட்டினை எவ்வாறு அபிவிருத்தி பாதையில் இட்டுச்செல்ல முடியும்? என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் ஆலோசனையின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள பொதுஜன பெரமுன கட்சிசார் பொறியியலாளர்கள் மன்றம் இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தனது முதல் கூட்டத்தொடரை தாஜ்சமுத்திரா ஹோட்டலில் ஆரம்பித்து வைத்தது.
இந்நிகழ்வில் பொதுஜன பொரமுன கட்சிசார் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பட்ட பொறியளாலர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியிருந்தார்.
Post a Comment