ஜனாதிபதித் தேர்தலின் முன்னர், மகிந்தவை பிரதமராக நியமிப்போம்
அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சி அதிகாரத்தில் இருந்து வீழ்த்த போவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர் ஆட்சி அதிகாரத்தை எமது கட்சி கைப்பற்றும். இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ரூபாயின் பெறுமதி குறைந்துள்ளமை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள தினேஷ், ரூபாயின் பெறுமதி குறையும் அரசாங்கத்தின் நாற்காலி சூடேறும் எனக் கூறியுள்ளார்.
Post a Comment