ஹரீஸ் அவர்களின், செயல்பாட்டை பாராட்டுகின்றோம்..!
இன்று திங்கள்கிழமை 01.10.2018 கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவிக்கு சென்ற பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சனி அபேசிங்க அவர்களிடம் முறைப்பாடு ஒன்றைப் பதிவுசெய்துள்ளார்.
அண்மையில் "தூசன விரோதி பலகாய" என்ற ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயல்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார என்பவர் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை ஊடகங்களின் மூலம் தெரிவித்து வருகின்றார். அதிலே முஸ்லிம்களுக்கு எதிரான சதித்திட்டங்களை அரங்கேற்றுவதற்கு பிரான்ஸ் நாட்டிலுள்ள துசேர பீரிஸ் என்னும் டயஸ்போரா அமைப்பைச் சேர்ந்த நபர் தனக்கு பணம் அனுப்பியதாக பகிரங்கமாகவே அறிவித்துள்ளார். அதேநேரம், அதற்கான ஆதாரமாக வங்கி பற்றுச்சீட்டு மற்றும் காசோலைப் பிரதிகளையும் காண்பித்துள்ளார்.
இந்த விடயமானது மிகவும் பாரதூரமானது என்றும், இதனைக் கவணத்தில் எடுத்து விசாரித்து அதற்கு எதிராக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் குற்றப் புலனாய்வு பொலிஸ் பிரிவுக்கு முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார் என்ற விடயமறிந்து மிகவும் சந்தோசமடைகின்றோம்.
கிந்தோட்டை, அம்பாரை, திகன பகுதிகளில் நடந்த வன்முறைகளுக்குப் பின்னால் இப்படியான அமைப்புக்கள் செயல்பட்டன என்பதோடு வடகிழக்கிலே முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை தாக்குவதற்கும், முஸ்லிம் அரசியல்வாதிகளை கொலைசெய்து அதன் மூலம் இனக் கலவரத்தை தூண்டுவதற்கும் சதிதிட்டம் தீட்டப்பட்டதாகவும் பகிரங்கமாகவே நாமல் குமார கூறியுள்ளார்.
(இந்த நிலையில் சென்ற அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக அளுத்கமை போன்ற இடங்களில் நடந்த இனவன்முறைகளுக்கு பின்னாலும் இப்படியான டயஸ்போராக்களின் செயல்பாடுகள்தான் இருந்ததாக கூறப்பட்டு வருவதையும் நாம் அறிவோம்.)
இப்படிப்பட்டவர்கள் தங்களுடைய அரசியல் லாபங்களுக்காகவும், நோக்கங்களுக்காகவும் முஸ்லிம் சமூகத்தை பகடைக்காய்களாக பயன்படுத்தி தங்கள் நோக்கங்களை நிறைவேற்றி வருகின்றார்கள் என்பது ஊர்ஜிதமாகின்றது. இந்த விடயங்களின் பாரதூரத்தை அறிந்து கொள்ளமுடியாத முஸ்லிம்கள், அவர்களின் வலையிலே இலேசாக மாட்டிக்கொள்கின்றார்கள். இந்த விடயம்தான் அளுத்கமை கலவரத்திலும் நடந்தது எனலாம்.
இப்போது ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் நாமல் குமார அண்மையில் ஜனாதிபதி மைத்ரி, முன்னால் பாதுகாப்பு செயலாளர் கோதாபாய ராஜபக்ஷ போன்றோரையும் படுகொலை செய்யப் பேரம் பேசப்பட்டதாக கூறிய விடயமானது இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்ற நிலையில், முஸ்லிம்களுக்கு எதிராக கூறப்பட்டுள்ள இந்த விடயங்களுக்காகவும் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று, எந்தப் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரோ, அல்லது முஸ்லிங்களின் தலைவர்களோ வேண்டுகோள் வைக்காத நிலையில் பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் இதற்கான விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அறிவித்ததை நாங்கள் பாராட்டாமல் இருக்கமுடியாது.
(இந்த நடவடிக்கைகளும் சென்ற காலங்களைப்போல் கொதித்து ஆறிய நீரைப்போன்ற செயல்பாடாக ஆகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் இவர்களின் கடமையுமாகும்.)
இதற்கு ஆதாரமாகத்தான் அண்மையில் கிழக்கிலே முஸ்லிம்களுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்களை தெரிவித்து, தமிழ் முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்துவதற்கு தமிழர்களில் உள்ள சில டயஸ்போராவின் ஏஜெண்டுகள் முயற்சித்து வருவதையும் நாம் அறிவோம், அதற்கு தமிழ் ஊடகங்களும் பகிரங்கமாகவே துணைபோவதையும் நாம் அறிந்துவருகின்றோம். இன்பராசாவின் ஆயுதக் குற்றச்சாட்டும், அம்பாரை வலத்தாப்பிட்டி என்ற ஊரில் முஸ்லிம்கள் தமிழர்களை வழுக்கட்டாயமாக மதம் மாற்றம் செய்யப்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டும், காத்தான்குடி மக்கள் கோவிலை உடைத்துவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டும், இப்படி இன்னும் பல போலிக் குற்றச்சாட்டுக்களும் பின்னாலில் பொய் என்று நிரூபிக்கப்பட்டிருந்தது. இதற்கு பின்னாலும் ஒரு பாரிய சதி யொன்று அரங்கேற்றப்பட இருந்ததா என்றும் சந்தேகப்பட வேண்டியுள்ளது. ஏனென்றால் இதன் உண்மைத் தன்மைகளை அறிந்து கொள்ள முற்படாமல் எடுத்தேன் கவுத்தேன் என்ற பாணியில் தமிழ் பத்திரிகைகள் சிலதும், தமிழ் இணையதளங்கள் சிலதும் பகிரங்கமான தலையங்கங்களை தீட்டி செய்திகளை வெளியிட்டதன்
நோக்கம், இதனூடாக பாரியதொரு இனக்கலவரத்தை ஏற்படுத்திவிடலாம் என்பதாகவே இருந்துள்ளது எனலாம். இதற்கு பின்னால் நாமல் குமார சொல்லுவதுபோல் டயஸ்போராக்களின் கைகள்தான் உள்ளது என்பதும் ஊர்ஜீதமாகின்றது. இந்த நிலையில் இந்த விடயங்களின் பாரதூரத்தை கவணத்தில் எடுத்து முஸ்லிம் தலைவர்கள் செயல்படுகின்றார்களா? என்றால் அதற்கு இல்லையென்றே பதில் கூறவேண்டியுள்ளது.
இந்த நிலையில் பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்களின் இந்த செயல்பாட்டை நாங்கள் பாராட்டாமல் இருக்கமுடியாது என்பதனால், இந்த விடயத்தில் அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுப்பதற்கு முஸ்லிம்கள் முன்வரவேண்டும்.
பிழையான செயல்பாடுகளை விமர்சிக்கும் அதேநேரம் நல்ல செயல்பாட்டுகளையும் நாம் ஆதரிக்க வேண்டும் என்பதே எங்களின் கருத்தாகவும் கொள்ளவேண்டும்.
-எம்.எச்.எம்.இப்றாஹிம்-
தமிழ் பயங்கரவாதிகளிடம் மிகப்பெரிய திட்டங்கள் இருப்பதால் கிழக்கில் இன வன்முறையை தூண்டும் பயங்கரவாதி வியாழேந்திரனை கைது செய்தால் பல திட்டங்கள் வெளிவரும்
ReplyDeleteயார் இந்த டயஸ்போரா எனும் பேர்வளி?, ஹறீஸின் சித்தப்பா போல
ReplyDelete