Header Ads



நாட்டில் கலகத்தை ஏற்படுத்த, ஐ.தே.க. முயற்சி - வாசுதேவ

நாட்டில் கலகத்தை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -30- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

பிரதமர் பதவி மஹிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டமையை எதிர்த்து உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடர முடியும். எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதுவரையில் அவ்வாறான ஓர் நடவடிக்கையை எடுக்கவில்லை.

ஆக்ரோசமான செயற்பாடுகளில் ஈடுபட்டு அரசாங்கத் துறையை வீழ்ச்சியடையச் செய்வதே ஐக்கிய தேசியக் கட்சியின் இரகசிய திட்டமாக அமைந்துள்ளது.

இந்த முயற்சி பற்றிய தகவல்கள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

நாடாளுமன்றம் தீர்மானம் எடுக்கும் வரையில் ஜனாதிபதி எடுத்துள்ள அனைத்து தீர்மானங்களும் செல்லுபடியாகும்.

நாடாளுமன்றை கூட்டுவது எனக்கு பிரச்சினை கிடையாது எனவும், நிறைவேற்று அதிகாரத்தை புறந்தள்ளி நாடாளுமன்றை கூட்ட முடியாது என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Sri Lankan voters never have seen a selfish and power hungry politician like you. You were fighting against executive presidency till you become minister. What happened to your socialist policies? have you sold everything for pinch of salt? Its time for you to retire.

    ReplyDelete
  2. It is you people who created this situation by your illegal move

    ReplyDelete

Powered by Blogger.