Header Ads



ஞானசாரருக்கு மன்னிப்பு கேட்டு, அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை பதிலில்லை

ஜனாதிபதி மன்னிப்பைக் கோரி இதற்கு முன்னர் பொதுபல சேனா அமைப்பும், சியம் பீடத்தின் கோட்டே பிரிவு உட்பட பல அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியும் இதுவரையில் எந்தவித பதிலும் கிடைக்கவில்லையெனவும்

பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் மேன் முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்ததன் காரணமாக தேரருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பைக் கோரும் நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக சிங்கள ராவய அமைப்பின் அமைப்பாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.

தம்முடன் இன்னும் பல அமைப்புக்களையும் இணைத்துக் கொண்டு ஜனாதிபதியைச் சந்திக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தேரர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மன்னிப்பைக் கோரி இதற்கு முன்னர் பொதுபல சேனா அமைப்பும், சியம் பீடத்தின் கோட்டே பிரிவு உட்பட பல அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியும் இதுவரையில் எந்தவித பதிலும் கிடைக்கவில்லையெனவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோனவல சுனில் போன்ற பாதாள உலக பிரபலங்களுக்கும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கும் ஜனாதிபதிக்கு மன்னிப்பு வழங்க முடியும் என்றால், நாட்டுக்காக தலையீடு செய்த பிக்கு ஒருவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க ஏன்? முடியாது எனவும் தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

1 comment:

  1. Keep This Terror Monk in JAIL for ever or Send him to Hungoda. Please Do not Release him.

    ReplyDelete

Powered by Blogger.