ஹக்கீமும், ரிசாதும் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்காவிடினும் சு.க. ஆட்சியமைக்கும் - சத்தார்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ரிசாத் பதியுதீனும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவை ஆதரிக்காவிட்டாலும் எதிர்வரும் 16 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்த எதிர்க்கட்சியும் சேர்ந்து புதிய அரசாங்கமொன்றினை அமைக்கும். ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது இரகசியமாக மஹிந்த ராஜபக் ஷவுடன் பேச்சுவார்த்தை நடாத்திக் கொண்டிருக்கிறார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முஸ்லிம் முன்னணியின் செயலாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.
நேற்று புத்தளம் கடையாமோட்டையில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் முஸ்லிம் முன்னணியின் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;
“புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முதன் முதல் அளுத்கம வன்செயல்கள் தொடர்பில் ஆணைக்குழுவொன்றினை நியமிப்பதற்கு உறுதி வழங்கியுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அரசியலில் எப்போதும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் பேரம் பேசுபவர்களாகவும் அதன் மூலம் சுயலாபம் பெற்றுக் கொள்பவர்களாகவுமே இருந்துள்ளார்கள். ஆனால் இம்முறை அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிட்டாது. அவர்கள் இன்று அமைச்சுப் பதவிகளை இழந்துள்ள நிலையில் பொது மக்களிடம் செல்லமுடியாத நிலையில் இருக்கிறார்கள். அவர்களை சமூகம் முற்றுமுழுதாக நிராகரிக்கும்.
புதிய அரசாங்கத்தில் நாம் முஸ்லிம்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வோம். அதற்காக பொதுஜன பெரமுனவின் முஸ்லிம் முன்னணி அரசாங்கத்திடம் அழுத்தங்களைப் பிரயோகிக்கும். ரணில் விக்கிரமசிங்க தனக்கே பெரும்பான்மை இருப்பதாகக் கூறிக்கொண்டு கனவுலகில் மிதக்கிறார். எதிர்வரும் 16 ஆம் திகதி அவர் மஹிந்த ராஜபக் ஷவுக்குள்ள ஆதரவினைக் கண்டதும் திகைத்துப் போய்விடுவார்.
மஹிந்த ராஜபக் ஷ பிரதமராக நியமனம் பெற்றுள்ளமை குறித்து முஸ்லிம்கள் பீதியடையத் தேவையில்லை. முஸ்லிம் சமூகத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என மஹிந்த ராஜபக் ஷ ஏற்கனவே உறுதியளித்துள்ளார். எனவே முஸ்லிம்கள் மஹிந்த ராஜபக் ஷவின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும்” என்றார்.
-Vidivelli
UNGALKU ENHA POST
ReplyDeletevaitru pilaippukkaha samudaayathai vitkum kooottam.
ReplyDeleteVayitthu polappu....pesunga...Amith vittachu....Ghanasaara...on the way....Poojitha and all defence puppets are pro supporters of the gang.... what else u need???
ReplyDeleteசத்தார் மஹிந்தவின் தம்பி கோத்தா அழுதகைமைக்கு அடிக்கும் போது நாங்கள் யாரும் கூட்டம் என்று அவர்கள் பார்க்கவில்லை, முஸ்லீம் என்ற ஒரே காரணத்தால் தான் அடித்தார்கள்.
ReplyDeleteஅதை இலகுவில் மறந்து விட முடியவில்லை.
சத்தார் nana...
ReplyDeleteமஹிந்தவின் தம்பி கோத்தா அழுதகைமைக்கு அடிக்கும் போது நாங்கள் யாரும் கூட்டம் என்று அவர்கள் பார்க்கவில்லை, முஸ்லீம் என்ற ஒரே காரணத்தால் தான் அடித்தார்கள்.
அதை இலகுவில் மறந்து விட முடியவில்லை.
அடுத்த லூசன்
ReplyDelete