காத்தான்குடி மாணவன், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு
காத்தான்குடியை பிறப்பிடமாகக் கொண்ட மாணவன் பிரித்தானியாவில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்திற்கு தெரிவு
இலண்டனில் புலம் பெயர்ந்து வாழும் முனீர் (ஆசிரியர் ) கரீம்
ஆசிரியரின் புதல்வியான ஆசிரியை தம்பதியினரின் புதல்வரான அப்தாள்
பாடாசாலையில் இடம்பெற்ற உயர்தரப் பரீட்ச்சையில் சிறந்த பெரு பேறுகளை பெற்று உலகில் மிகச் சிறந்த பல்கலைக் கழகங்களில் ஒன்றான ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியுள்ளார் .
உலகில் பேசப்படும் பல்கலைக் கலைக்கழகங்களில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்
கழகமே முதல் இடத்தைப் பெற்றுள்ளது இதற்கு பல்வேறு சிறப்புக்கள் உள்ளன
இதன் பாடத்திட்டம் உலகநாடுகளில் பல்வேறு சாதனையாளர் களையும் உலகில்
பல்வேறு நாடுகளில் உள்ள அரசியல் ஆளுமைகளையும் உருவாக்கிய
பெருமைக்குரிய இடத்தினை பெற்று உலக வரலாற்றில் இடம்பிடுத்துள்ளது
பிரித்தானியாவில் புலன்பெயர்ந்து வாழும் காத்தான்குடியை சேர்ந்த
மக்களுக்கு கல்வியில் இவர் எட்டி இருக்கும் அடைவு பெரும் மகிழ்ச்சியை
ஏற்படுத்தி இருக்கிறது . இம்மாணவனின் அடைவுக்கு பெற்றோரின் ஒத்துழைப்பு
இன்றி அமையாதது . ( சமூக சேவையாலாளரும் சுங்கத்திணைக்கள அதிகாரியுமான)
முபீன் அவர்களின் மூத்த சகோதரரின் புதல்வர் என்பதும் இங்கு
குறிப்பிடத்தக்கதாகும்.
காத்தான்குடி மண்ணின் அண்மைக்கால கல்வியை நோக்கிய அடைவுகள் தேசிய
மட்டத்திலும் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில் இவரது அடைவு ஏனைய
மாணவர்களுக்கும் ஒரு உந்து சக்தியாக அமைக் கூடும் என எதிர்பார்க்கப்
படுகிறது .
இவரது இச்சிறப்பான அடைவு பிரித்தானியாவில் உள்ள ஆக்ஸ்போர்ட்
பல்கலைக் கழகத்திற்கு தெரிவான காத்தான்குடியைச் சேர்ந்த முதல் மாணவன்
என்ற சிறப்பையும் இவர் வரலாற்றிலும் இடம்பிடித்திருப்பதோடு
பிறந்த மண்ணிற்கும் பெருமையையும் சேர்த்துள்ளார் .
மேலும் அப்தாள் (மாணவன் ) வரலாற்றுத்துறையை தனது கற்கை நெறியாக
தேர்ந்தெடுத்திருப்பது இலங்கை முஸ்லிம்களுக்கு மென் மேலும் சிறப்பை
சேர்த்திருக்கிறது எதிர்காலத்தில் முஸ்லிம்சமூகத்திற்கு பெரும்
நன்மையாக அமைக்க கூடும் எதிர்பார்க்கப்படுகிறது.
அப்தாளுக்கு எமது மனப்பூர்வமான வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் உரித்தாகட்டும். எதிர்காலத்தில் அவருடைய ஆய்வுகள் எமது நாட்டில் முஸ்லிம்களின் இருப்பையும் வரலாற்றையும் உறுதி்ப்படுத்தவும் இந்த நாட்டு முஸ்லிம்களின் வரலாற்றுக்கு ஒரு திருப்புமுனையாகவும் அமைய அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றோம். தயவுசெய்து குறிப்பிட்ட மண்ணுக்கு மட்டும் சுருக்கிக் கொண்ட இனவாதத்தைத் தவிர்க்குமாறும் பணிவாக வேண்டிக் கொள்கின்றேன். அத்துடன் இந்த கட்டுரையின் தலைப்பை மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளவும்.
ReplyDeleteCongratulations
ReplyDeleteperfect heading
ReplyDeleteகாத்தான் குடியானை கழுதாவளையான் என்று கூற முடியாது.
காத்தான்குடியான் வாழ்க