எனக்கு புற்றுநோய் என்பதால், ஓய்வில் செல்கிறேன் - ரோமன் ரெய்ன்ஸ் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல WWE மல்யுத்த வீரரான ரோமன் ரெய்ன்ஸ், தனக்கு புற்றுநோய் இருப்பதாக கடந்த ‘RAW' நிகழ்ச்சியில் கூறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக பிரபல மல்யுத்த விளையாட்டான WWE-யில், ரோமன் ரெய்ன்ஸ் தற்போது யுனிவர்சல் சாம்பியனாக இருக்கிறார். மேலும், WWE Raw மற்றும் Smack Down நிகழ்ச்சிகளில் தோன்றும் பல்வேறு Wrestling நட்சத்திரங்களில் முன்னணி வீரராகவும் ரோமன் ரெய்ன்ஸ் இருக்கிறார்.
தற்போது 33 வயதாகும் ரோமன் ரெய்ன்ஸ், கடந்த 2008ஆம் ஆண்டு முதல் லுகிமியா எனும் ரத்தம் அல்லது எலும்பு மஜ்ஜை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான மருந்துகளை எடுத்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது அவருக்கு நோயின் தீவிரம் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால், அவருக்கு நீண்ட ஓய்வு மற்றும் சிகிச்சை பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ரோமன்ஸ் ரெய்ன்ஸ் WWE நிகழ்ச்சியில் ரசிகர்கள் முன்பு தோன்றி கூறுகையில், ‘நான் இனிமேல் சாம்பியனாக இருக்க முடியாது. நீங்கள் யாரும் எனக்காக வருத்தப்பட வேண்டாம். எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
இது நான் ஓய்வு பெறும் பேச்சு அல்ல. நான் நிச்சயம் மீண்டு வருவேன். இது பட்டம் வெல்வது பற்றியோ, உச்சத்தில் இருப்பது பற்றியோ அல்ல, இது முற்றிலும் ஒரு நோக்கத்துக்காக தான்’ என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, WWE நிறுவனமும் ரோமனின் நீண்ட கால ஓய்வை உறுதி செய்தது. பலமுறை சாம்பியன் பட்டங்களை வென்று முன்னணியில் இருக்கும் ரோமன் ரெய்ன்ஸின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment