உங்களை ஜனாதிபதியாக்கியமைக்கு, நன்றிக் கடன் இதுவா? மைத்திரியிடம் கேட்ட சம்பந்தன்
இலங்கையின் தற்போதைய அரசியல் குழப்ப நிலையால் மக்கள் நட்டாற்றில் நிற்கின்றனர். உங்களை ஜனாதிபதியாக்கியமைக்கு நாட்டு மக்களுக்கு நீங்கள் செய்த நன்றிக் கடன் இதுவா? என மைத்திரியிடம் கேள்வி எழுப்பியுள்ளார் சம்பந்தன்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரில் சந்தித்து காரசாரமாக விவாதித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.
நாடாளுமன்றத்துக்கு மதிப்புக் கொடுத்துச் செயற்படுமாறும், நாட்டு மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் செயற்பட வேண்டும் என்றும் மைத்திரிக்கு சம்பந்தன் இடித்துரைத்தும் உள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே தான் மேற்கண்டவாறு தெரிவித்ததாக இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
அப்படி கேட்டிருந்தால் துணிச்சலும்,மக்களின் ஆணைக்கு மதிப்பளித்தவர் என்று சம்பந்தனை பாராட்ட இலங்கை (62இலட்ச) மக்கள் துணிந்து எதிர்ப்பு காட்டல் வேண்டும்
ReplyDeleteசம்பந்தன் ஐயா தனது கடமையைச் சரியாக செய்திருக்கின்றார்.
ReplyDeleteGood advice....!
ReplyDeleteவாழ்த்துக்கள் சம்பந்தர் ஐயா. இந்த பாரிய நெருக்கடி நிலையில் தமிழர் தலைவராகவும் எதிர்க் கட்ச்சித் தலைவராகவும் தமிழரது பாதுகாப்பு மட்டுமன்றி முஸ்லிம்களதும் மலையக தமிழரதும் பாதுகாப்பையும் சிங்கள ஜனநாயக சக்திகளின் பாதுகாப்பையும் உறுதிப் படுத்தும் வகையில் நிமிர்ந்து நில்லுங்கள். வரலாறு உங்களைப் போற்றும்.
ReplyDeleteஐயா சம்பந்தன் அவர்களே,
ReplyDeleteநீங்கள் எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவியையும் அதன் அதிகாரத்தையும் ஒழுங்காக பயன்படுத்தாமையும் இன்றைய அரசியல் நிலைமைக்கு ஒரு முக்கிய காரணம் என்பதை மறந்து விடாதீர்கள்
ஐயா சம்பந்தன் அவர்களே,
ReplyDeleteநீங்கள் எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவிக்கான கடமையை சரியாக செய்திருந்தால் நாட்டு மக்கள் நட்டாற்றில் விடப்பட்டிருக்க மாட்டார்கள்
You are a real gentleman sir..
ReplyDeleteஇலங்கை அரசியல் வரலாற்றில் இலங்கைத் தமிழர்களுக்கு (அதில் முஸ்லிம்களைச் சேர்த்துவிட வேண்டாம் ஐயா) கிடைத்த மாபெரும் சொத்து சம்பந்தன் ஐயா அவர்கள்தான். ஐயா அவர்கள் ஏனைய தமிழ்த் தலைவர்களிலிருந்து மிகவும் வேறுபட்ட ஒருவராகவே எப்பொழுதும் காணப்படுகின்றார். தன்னில் மிக நேர்மையான மனிதன் (Gentleman). தேவையுள்ளோருக்கு அள்ளிக் கொடுக்கும் பெருந்தகையாளர். மனிதாபிமானமிக்க ஒருவர். பெரும் துணிச்சல்மிக்கவர். அரசியலுக்கு வருமுன்னரே பெரும் செல்வந்தராக இருந்து மக்கள் சேவை செய்தவர். எல்லாக்காலத்திலும் எல்லா மக்களையும் அரவணைத்தே சென்றவர். சிறப்பாக திருமலை மாவட்ட முஸ்லிம்களுக்கு மிக மிக பரிச்சயமானவர். உண்மையை உள்ளபடியே உரைப்பவர். இவருடைய தன்மைகளைக் (attitudes + characteristics) கொண்டுள்ள ஒருவர் முஸ்லிம் தலைவராக சமகாலத்தில் இருந்திருந்தால் தற்போதைய வெட்கம் கெட்ட இழிநிலைக்கு முஸ்லிம் சமூகம் சென்றிருக்கமாட்டாது. ஆயினும் சம்பந்தர் ஐயாவில் எனக்கு மட்டுமல்ல பெரும்பாலான முஸ்லிம்களுக்கும் ஒரு வருத்தம் (heartache). அரசியல்ரீதியில் ஐயா அவர்கள் ஏனைய தமிழ் அரசியல் தலைவர்கள்போல் பெரும்பாலும் முஸ்லிம் சமூகத்தினை ஓரம்கட்டுகின்ற ஒருவராகவே காணப்படுகிறார். மற்றப்படி அவர்கள் மிக சிறந்த அரசியல்ஞானிதான். இன்னும் பல்லாண்டுகள் ஐயா அவர்கள் நல்ல தேகாரோக்கியத்துடன் வாழ்ந்து நற்சேவைகள் புரிய எங்களது பிரார்தனைகள்.
ReplyDelete