மகிந்தவை பிரதமராக, நியமித்தது சட்டரீதியானது – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
புதிய பிரதமர் ஒருவரை ஜனாதிபதி நியமித்தது சட்ட ரீதியானது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அச்சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி யு.ஆர்.டி. சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி 19 ஆவது திருத்தச் சட்டத்தின்படியே செயற்பட்டுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கு 19 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு யாருக்கு இருக்கின்றதோ, அவரை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு முடியும். அவ்வாறு நியமிக்கப்பட்டவருடன் இணைந்து புதிய அமைச்சரவையையும் அமைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
2
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கூட்டு அரசாங்கத்திலிருந்து விலகியவுடன் அந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர்கள் பதவி விலகுகின்றமையால் அமைச்சரவை கலைக்கப்படுகின்றது. இந்த நிலைமைக்கு என்ன செய்வது என்பதை பாராளுமன்றத்தைக் கூட்டி தீர்மானம் எடுக்கும் வரையில் ஜனாதிபதி காத்திருக்க வேண்டும் என சட்டத்தில் எங்கும் கூறப்படவில்லையென இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் யு.ஆர்.டி. சில்வா தெரிவித்தார்.
அரசாங்கத்திலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி விலகியவுடன் முன்னாள் பிரதமருக்கு இந்த அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியாது என ஜனாதிபதி கருதியிருக்க வேண்டும். இதனால், பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலமுள்ள ஒரு கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ என ஜனாதிபதி இனங்கண்டதனால், ஜனாதிபதி அவருக்கு பிரதமர் பதவியை வழங்கியுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தனியார் வானொலிக்கு தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்
Where is the majority? First he must proof his majority, then only president can appoint him as a PM.
ReplyDeleteஇது முட்டாழ்களின் விளக்கம்.
ReplyDelete