இன்டர்நெட்டினால் மன, நோயாளிகளாக மாறும் இலங்கையர்கள் - அதிர்ச்சித் தகவல்
இணைய பாவனை காரணமாக இலங்கையர்கள் அதிகளவில் மனநிலை பாதிக்கப்படுவதாக மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.
இலத்திரனியல் ஊடகங்கள், இணையம் போன்றவை முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதும், அவற்றுக்கு மக்கள் அடிமையாதலும், அபாயகரமான மட்டத்தை அடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலத்திரனியல் ஊடகங்கள், இணையம் ஆகியவற்றின் மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகளைத் தாண்டி, சமூகத்தில் கூடுதலான தீமைகள் ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளதென உளவியல் நிபுணர் வைத்தியர் அபேக்ஷா ஹேவாகீகன தெரிவித்தார்
இணைய துஷ்பிரயோகமும், இணையத்திற்கு அடிமையாதலும், போதைப்பொருள் துஷ்பியோகத்திற்குச் சமமான பாதக விளைவுகளை ஏற்படுத்திக்கூடியன. எனவே, இளம் தலைமுறை மத்தியில் கல்விக்காக புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்துவது பற்றி கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
தமது நாளாந்த செயற்பாடுகளை பாதிக்கும் வகையில் இணையத்தையோ, முகநூலையோ, திறன்பேசிகளையோ பயன்படுத்துதல் அடிமைத்தனமாகும்.
இரண்டு வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு இலத்திரனியல் ஊடக கருவிகளையோ, திறன்பேசிகளையோ பயன்படுத்த இடமளிக்கக்கூடாது. அதீத இணையப் பாவனை மூலம் மன அழுத்தம், பார்வைக் கோளாறுகள், செயற்றிறனில் வீழ்ச்சி, தூக்கமின்மை, முள்ளந்தண்டு நலிவடைதல் முதலான தீய விளைவுகள் ஏற்படுவதாக வைத்தியர் அபேக்ஷா ஹேவாகீகன தெரிவித்தார்.
ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் கேட்டார்கள்:
ReplyDelete''நீங்கள் செய்யும் செயல்களிலேயே மிகச்சிறந்த செயலைக் குறித்து உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா..?''
தோழர்கள், ''ஆம், இறைத்தூதரே!'' என்றனர்.
நபிகளார் தொடர்ந்து கேட்டார்கள்: ''உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்த செயலைக் குறித்து நான் அறிவித்துத் தரட்டுமா?,
உங்கள் அந்தஸ்துகளை உயர்த்தும் செயலைக் குறித்து நான் அறிவித்துத் தரட்டுமா?,
தங்கம், வெள்ளி ஆகியவற்றைத் தர்மம் செய்வதைவிட மிகச் சிறந்த செயலைக் குறித்து உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா?,
எதிரிகளைப் போர்க்களத்தில் சந்தித்து போராடுவதைவிட மிகச் சிறந்த செயலைக் குறித்து உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா?''
தோழர்கள், ''ஆம், இறைத்தூதரே!'' என்றனர்.
அப்போது பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
''மகத்துவம் மிக்க இறைவனை நினைவு கூறுவதுதான் அச்செயல்''.
(திர்மிதி)
"(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் (எனும் இறை நம்பிக்கை) கொண்டவர்கள்;
மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன;
அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!"
(அல்குர்ஆன் : 13:28)
இறைவனை தியானித்துக் கொண்டிருந்த விரல்கள், அவனை மறந்த நிலையில் இணையத்தோடு இணைந்ததால்தான் இத்துணை அனர்த்தங்கள் இப்போது மட்டும்.