ஒரு நேர சாப்பாட்டிற்கு கூட, வழியில்லாமல் மக்கள், கடந்த கால ஆட்சியை நாம் ஏன் மாற்றினோம்..?
கடந்த கால ஆட்சியை நாம் ஏன் மாற்றினோம்? குறித்த ஆட்சியின் வேளைத்திட்டங்கள் நல்லது.எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அவர்களின் நிலைப்பாடுகள் பிழை. ஏமாற்றுக்கள், ஊழல்கள். அதன் காரணமாகவே கடந்த ஆட்சி மாற்றப்பட்டது என பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் உப்புக்குளம் பிரதான வீதியில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த அலுவலகத்தை பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் வைபவ ரீதியாக திறந்து வைத்த பின் கட்சியின் ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
பிரதி அமைச்சராக நான் நியமனம் செய்யப்பட்ட போது ஜனாதிபதியை சந்தித்து பல்வேறு தேவைகளை முன் வைத்தேன். பிரதி அமைச்சராக இருந்து கொண்டு நான் சும்மா இருக்க முடியாது.
சுமார் 2 ஆயிரம் மில்லியன் ரூபாவிற்கான வேளைத்திட்டங்களை நான் சமர்ப்பித்துள்ளேன்.இந்த வருடத்திற்குள் 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.அதில் ஆரம்ப கட்டமாக நூறு மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த நிதி ஒதுக்கீட்டை மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் பிரித்து ஒதுக்க வேண்டியுள்ளது.
-யுத்தம் முடிவடைந்து 10 வருடங்களாகின்றது. யுத்தத்திற்கு முன்னரும் மீள் குடியேற்ற அமைச்சு காணப்பட்டது.மீள் குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சு ஒரு தற்காலிக அமைச்சு.
இந்த அமைச்சை வைத்துக் கொண்டு சிலர் வியாபராம் செய்ய பார்க்கின்றார்கள்.
சரியான முறையில் திட்டங்களை மேற்கொண்டிருந்தால் அனைவருக்குமான உரிய தேவைப்பாடுகள் முடிவடைந்து இந்த அமைச்சே இல்லாமல் போயிறுக்கும்.
தற்போதைக்கு வந்திருக்க வேண்டியது வடக்கு அபிவிருத்தி. ஆனால் தற்போது மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி அமைச்சு செயற்படுகின்றது.
மீள் குடியேற்றம் முடிவடையவில்லை, புனர்வாழ்வளிப்பு நிறைவடையவில்லை. ஆனால் அதற்கிடையில் வடக்கு அபிவிருத்தி. அரசாங்கத்தின் செயல் திட்டங்களும் இத்திட்டங்களில் பிழையாக வழி நடத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் நல்ல நோக்கத்திற்காக இப்பகுதிகளில் பாரிய நல்ல திட்டங்களை தந்தாலும் வாழ்வாதார உதவிகள் உற்பட அனைத்தமே சரியான திட்டமிடல் இல்லாமல் இந்த நிதி ஒதுக்கீடுகள் கூடுதலாக துஸ்பிரையோகம் செய்யப்படுவதாக பல முறைப்பாடுகள் எமக்கு வருகின்றது.
மேலும் கிராமங்களில் இடம்பெறுகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் மக்களுடன் இருந்து பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும்.
கடந்த கால ஆட்சியை நாம் ஏன் மாற்றினோம்? குறித்த ஆட்சியின் வேளைத்திட்டங்கள் நல்லது. எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. அவர்களின் நிலைப்பாடுகள் பிழை. ஏமாற்றுக்கள்,ஊழல்.
அவ்வாறான ஒரு நிலை இருக்கின்ற போது ஏன் நாங்கள் இங்கே நடக்கின்ற இந்த ஊழல்கள், மற்றும் அடாவடித்தனங்களையும், அரசியல் வியாபாரங்கள் நடக்கின்றதை தடுக்க முன் வரக்கூடாது?
அவற்றை தடுக்க முன் வாருங்கள். நாங்களும் நியாயமான, நேர்மையான அரசியலை மேற்கொள்ளுவோம். இனி வருகின்ற காலங்கள் எமக்கு அபிவிருத்தி காலமாக அமையட்டும்.
சில கிராமங்களுக்குச் சென்றால் ஒரு நேர சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் மக்கள் இருக்கின்றார்கள்.அவர்களின் கஸ்டங்களும் நீக்கப்பட வேண்டும்.நாங்கள் யாரை குற்றம் சுமத்துகின்றோமோ அந்த நிலை எமக்கு ஏற்படாத வகையில் நியாயமாக செயல்பட ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கின்றோம்.என மேலும் தெரிவித்ததார்.
Your Boss is going behind Mahinda & Co.......
ReplyDelete