பெண்ணின் சேலையையும், பிக்குவின் காவியையும் அவிழ்க்கிறார்கள் - மகிந்த ஆவேசம்
அங்குகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை பார்வையிட சென்ற தலைமை பௌத்த பிக்கு ஒருவரின் காவி உடை அவிழ்க்கப்பட்டதாகவும், அதேபோன்று பெண்ணொருவரின் சேலையும் அவிழ்க்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தங்காலையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், அங்குகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பௌத்த பிக்கு ஒருவரை பார்க்க சென்ற தலைமை பௌத்த பிக்கு ஒருவரின் காவி உடை அவிழ்க்கப்பட்டுள்ளது.
வயதான பெண்மணி ஒருவரின் சேலையையும் கழற்றப்பட்டுள்ளது. இப்படியான நிலைமை ஏற்பட்டுள்ளமை குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்.
இந்த விடயங்கள் தொடர்பாக அரசாங்கம் அமைதியாக இருந்து விட முடியாது. போர் நடந்த காலத்தில் கூட இப்படியான சம்பவங்கள் நடக்கவில்லை என மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment