Header Ads



ஒரு மகப்பேற்று நிபுணரின், வேதனையான பதிவு

♥இன்று என் வாழ்வின் மிக சோகமான நாள். ஒரு மகப்பேற்று டாக்டராக, நான் பல கர்ப்பிணி பெண்களை மருத்துவ பரிசோதனையின் போது கையாண்டிருக்கிறேன். மற்றும் ஒவ்வொரு முறையும் குழந்தைகள் எந்தவித பிரச்சினையில்லாமல் பிறக்க வேண்டும் என்று நான் எப்போதும் தாய்மார்களுக்காக என்னையும் மீறி கடவுளிடம் மன்றாடி இருக்கிறேன்.

♥டெலிவரி(பிரசவ) அறையில் வலியால் துடிக்கும் பெண்களின் உணர்வை வேதனையை துடிப்பை யாராளும் விவரிக்க முடியாது அது ஒரு மறு பிறவிக்கான போராட்டம்.

♥இது தனது குழந்தைக்காக 9 மாதங்கள் அவர்கள் தாங்கியது. தமக்காக இதில் ஒரு நாளைக்கூட அவர்கள் செலவழித்ததில்லை.

♥இன்று நான் வேதனையுடன் அழுதேன், ஏனெனில் நான் ஒரு பெண்மணியை (கர்ப்பிணியை) இழந்துவிட்டேன், இது போன்ற நேரங்களில் வாழ்க்கை வெறுத்துவிடுகிறது. கடவுள் வேறுமாதிரி முடிவு எடுத்துவிடுகிறான். தாங்க முடியவில்லை காரணம்

♥ இந்த பெண்ணின் கதை மிகவும் வேதனையாக இருக்கிறது? 14 வருடங்களாக அவள் மலடிஎன்று தூற்றப்பட்டு குழந்தை இன்றி இருந்தாள்! நாம் IVF முயற்சி மற்றும் பல நவீன முறை என நிறைய வழியாக முயற்ச்சி செய்து இறுதியாக கடவுளின் அருளால் அவர் கர்ப்பம் தரித்தாள் இதை விஞ்ஞானம் மற்றும் மனித அறிவுக்கு அப்பாற்பட்டது என்று தான் நான் கூறுவேன் ஏனென்றாள்

♥அவர் கருப்பை நீர்க்கட்டி மற்றும் மாதவிடாய் என பல தாக்கத்தை கொண்டிருந்த போதிலும், அவள் கர்ப்பமாக இருந்தாள்,

♥அவளது கவலை உருக ஆரம்பித்தது, எல்லாம் சரியாக இருந்தது, அது அவளுக்கு மறுவாழ்க்கைக்கான ஆரம்பம், அவர் தனது தாய்மையை உலகிற்கும் உறவினருக்கும் உணர்த்திய மகிழ்ச்சியில் இருந்தார்.

♥குழந்தை இல்லாதவள் என தன்னை சபித்தவர்களை நினைத்து சிரித்தாள்... அவள் வைத்தியரான என்னை கடவுளாக பார்த்தாள்... ஆனால் நான் கடவுளை தான் கடவுளாக பார்த்தேன்...

♥9 மாதங்களுக்குப் பிறகு, பிரசவ வலி எடுக்க அவளுடைய கணவர் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார், எனக்கு மருத்துவமனையில் இருந்து தொலைபேசி வந்தது 
நான் செய்துகொண்டிருந்த எல்லாவற்றையும் விட்டுவிட்டு மகிழ்வுடன் அவளிடம் சென்றேன்.

♥7 மணி நேரம் ஆகியும் சுகப்பிரசவம் ஆகவில்லை , அவள் வேதனையால் துடித்தாள் அது மிகவும் வேதனையாக இருந்தது, சுகப்பிரசவ சாத்தியக்கூறு விலகியது.. எனவே அவளைத் அறுவைச்சிகிச்சை (சிசேரியன்) செய்ய நாங்கள் தீர்மானித்தோம்.

♥அறுவைச்சிகிச்சை மூலம் குழந்தையை எடுத்து அவளின் மார்பில் வைத்தோம் ... கைகலால் அணைத்துக்கொண்டவள் எங்களை கண்ணீரோடு பார்த்து புன்னகைத்தாள்... அடுத்த நிமிடம் அவள் உயிர் பிரிந்துவிட்டது.. கைகள் குழந்தையை அணைத்தவாறே இருந்தது.

♥நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அவளை இழந்து விட்டோம். ஆனால் குழந்தை உயிரோடு இருந்தது. அவள் இறப்பதற்கு முன், அவள் கையில் குழந்தையை வைத்திருந்தாள். அவள் இறக்கப்போவதை அவள் உணர்ந்திருந்தாள்... புன்னகையோடு கண்ணீருமாக எங்களைப்பார்க்கும் போதே என்னால் உணர முடிந்தது...

♥ அவளின் கண்ணீர் நிச்சயமாக அவளின் மரணத்திற்காக அல்ல. அவளின் குழந்தை நல்லபடியாக உள்ளது என்பதற்காகவே.

♥தன் உடல் நிலை மோசமானது என்றுதெரிந்தும் மரணம் நடக்கலாம் என்று தெரிந்தும் குழந்தைக்காக தன் உயிரை அவள் பணயம் வைத்தாள்...

♥இதை கேள்விப்பட்டபோது, ​​அவளுடைய கணவன் என்னை புண்படுத்தினான் மிக கவலையாக கதறி அழுதான் திட்டினான்... , இறுதியில் கணவன் மயங்கிவிட்டார்,

♥அவர்களுடைய மகிழ்ச்சியான நாள் இருளாக மாறிவிட்டது. இன்றைய தினம் ஒரு புதிய வாழ்க்கையை வாழ அவள் ஆயத்தமாக இருந்தாள்.

♥சகோதரர்களே 
பெண்களுக்கு மரியாதை கொடுங்கள், ஏனென்றால் பிரசவ காலத்தில் அவர்கள் உயிரைக் காப்பாற்ற மரண பள்ளத்தாக்கை கடந்து செல்கின்றனர். உங்கள் மனைவியை மரியாதை செய்யுங்கள்!

♥9 மாதங்களுக்கு உங்கள் குழந்தையை அவள் வயிற்றில் வைத்திருப்பது வேடிக்கையானது அல்ல, உங்கள் குழந்தைகளை பெற்றெடுக்கும் வரை அவளுக்கு வேறு வேலைகள் இல்லை.

♥இந்த பதிவை படிக்கும் நோயற்ற வாழ்வு குழு உறவுகள் கர்ப்பிணிப் பெண்களைப் பாதுகாக்க தயவுசெய்து, கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அன்புள்ள கணவர்மார்களே, உங்கள் மனைவியை மதியுங்கள், ஏனென்றால் அவர் உண்மையிலேயே உயிர் கொடுப்பவர். உயிரையும் கொடுப்பவர்.

♥நம் வாழ்வில் உள்ள பெண்களை மதியுங்கள் .

உண்மை கதை

4 comments:

  1. உங்களைப்போன்ற நல்லவருகளுக்கு மத்தியில் பணப்பிசாசு பிடித்த எதற்கும் கவலைப்படாத வைத்தியர்களுமுண்டன்பதை நினைக்க வைக்கிறது.
    கடவுளைப்பெறிது படுத்தும் இவ்வையதியருக்கு நேர் எதிராக தன்னையே கடவுளாக நினைக்கும் இருமாப்புகொண்ட வைத்தியர்களையும் இங்கு நினைக்க வைக்கிறது.

    ReplyDelete
  2. Why don't Jaffa Muslim share doctor's details. He is a good example for other doctors

    ReplyDelete
  3. Staying with my wife during the delivery in the labour room was the best thing I've done in my married life.

    ReplyDelete
  4. Whether Jaffna Muslim Share the name of this doctor or not, we all have to make dua for her to prosper more and more health and strength to undertake more and more challenges of this caliber.

    ReplyDelete

Powered by Blogger.