அரசாங்கத்தை மாற்றியமைக்க, எந்த நேரத்திலும் தயார் - மஹிந்த
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலைமையை மாற்றி ஸ்தீரத் தன்மையை ஏற்படுத்த வேண்டுமாயின் புதிய அரசாங்கமொன்றை ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி புதிய நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
மஹிந்தானந்த அலுத்கமகே எம்.பி.யினால் ஊழல் மோசடியில் ஈடுபட்ட டொப் 10 எனப் பெயரிட்டு ஊழல் மோசடி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதுவரை அதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. இந்த அரசாங்கத்தின் நிலையற்ற தன்மையை இப்போது காண முடிகின்றது. இந்த நிலைமையை உடன் மாற்றியமைக்க வேண்டும். இந்த அரசாங்கம் நாட்டிலுள்ள சட்டத்தை மதிப்பற்றதாக மாற்றியுள்ளது.
கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள சகலரும் எந்த நேரத்திலும் இந்த அரசாங்கத்தை மாற்றியமைக்க தயாராக இருக்கின்றனர் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment