Header Ads



யார் இந்த போக்பா..?


உலகப் புகழ் கால்பந்தாட்ட வீரர் வெற்றி நேரத்தில் யாரை நினைத்தார்! கால் பந்தாட்ட ரசிகர்களுக்கெல்லாம் தெரியும் ‘போக்பா’ என்ற வீரரை தெரியாமல் இருக்க முடியாது.

அவர் பிரான்ஸ் நாட்டில் 15 மார்ச் 1993 ல் பிறந்த ஆப்ரிக்க இனத்தவர்.

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது போல அவர் உலக 21 வயதிற்குட்டபட்ட வர்களின் கால்பந்தாட்டத்தில் பிரான்ஸ் நாட்டிற்கு சாம்பியன் பட்டத்தினை பெற்றுத் தந்த சிறப்புப் பெட்டவர். அதன் மூலம் கோல்டன் பாய் விருதை 2013 னிலும், பிராவோ விருதினை 2014 லிலும் பெற்றவர்.

அவருடைய கால்கள் ‘ஆக்டொபஸ்’ போன்று நீளமாக இருப்பதால் எதிரிகள் கொண்டு செல்லும் பந்தினை லாவகமாக கைப்பற்றி அதனை எதிரி வீரர்கள் பறிக்காமல் தட்டி சென்று கோலில் தள்ளும் வெற்றி வீரரானதால் அவரை ‘பொலபொ பால்’ என்று பிரான்ஸ் மக்கள் அழைப்பார்களாம்.

அப்படி பெயரும், புகழும் பெற்ற வீரர் சமீபத்தில்(மே 2018) இஸ்லாமிய மார்க்கத்தினை தழுவி மக்காவிற்கு உம்ரா ஆர்ப்பாட்டமில்லாமல் சென்ற புகைப்படம் ஊடகங்களில் வெளியானது.

அவருக்கு கால்பந்தாட்டத்தில் விளையாட ரூ 811 கோடிகள் கொடுக்கப் படுகின்றது. இப்போது அவர் மாஞ்செஸ்டர் யுனைடெட் என்ற அணியில் விளையாடி வருகிறார். அவர் 29 3 2018 ல் ரசியாவிற்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பான கோலினை அடித்ததும் தனது மேல் சட்டையினை கீழிலிருந்து மேலே தூக்கி காட்டினார். அதனில், என்ன எழுதியிருந்தது என்றால், தனது தந்தை பிறந்த தின வாழ்த்தும், அல்லாஹ் அவருக்கு கருணை காட்டும்படியும் எழுதியிருந்தது. அவருடைய தகப்பனார் தனது 80 வது வயதில் நோயால் இறைவனடி சேர்ந்ததினை நினைவூட்டுவதாகவும் அது இருந்ததாம்.

ஒரு சிறந்த விளையாட்டு வீரர் தான் எப்படியும் கோல் அடித்துவிடுவோம் என்றும் அதனை தந்தை நினைவாக இருக்க வேண்டும் என்றும், அவர் எல்லாம் வல்ல அல்லாஹ் கருணையுனடன் சுவர்க்கத்தில் இருக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டது வருங்கால இளைஞர்களுக்கு ஒரு சிறந்த பாடமாகும் என்றால் சரிதானே!

AP,Mohamed Ali

1 comment:

Powered by Blogger.