முஸ்லிம் தரப்பு கோரிக்கைகள்...!
1. முஸ்லிம்களுக்கெதிரான இனமதவெறி காழ்ப்புணர்வுப் பரப்புரைகளை கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான வலிதான சட்ட ஏற்பாடுகள்.
2. அளுத்கமை, திகன, காலி அம்பாறை போன்ற பிரதேசங்களில் வன்முறைகளால் பாதிக்கப் பட்ட முஸ்லிம்களுக்கு உரிய நட்டஈடுகளை வழங்குதல்.
3. அரசியல் தீர்வுகள் அதிகாரப் பரவலாக்கம் குறித்த பேச்சுவார்த்தைகளின் பொழுது முஸ்லிம் சிவில் சமூகத் தலைமைகளினது ஆலோசனைகளை பெறுதல்.
4. வடபுல முஸ்லிம்கள் முழுமையாக அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுடன் மீள் குடியேற்றப் படுவதற்கான கால அட்டவணை.
5. புதிய உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை மற்றும் எல்லை நிர்ணய சட்டங்களால் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள அநீதியை நிவிர்த்தி செய்தல்.
6. வடகிழக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலும் தமிழர் கட்டுப் பாட்டிலும் இருக்கும் காணிகளை விடுவித்தல்.
7. நுரைச்சோலை சுனாமி வீட்டுத் தொகுதிகளை உடனடியாக புனர்நிர்மாணம் செய்து ஏற்கனவே தீர்மானிக்கப் பட்ட பயனாளிகளுக்கு வழங்குதல், இல்லாதவிடத்து வேறு இடங்களில் வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்தல்.
8. வடகிழக்கில் முஸ்லிம்களுக்கு உரித்தாக வேண்டிய அரச காணிகளை அடியாளம் செய்து திட்டமிட்ட குடியேற்றங்கள், புனித பிரதேசங்கள், அகழ்வாய்வுகள், வர்த்தகப் பயிர்ச் செய்கைகள் என மேற்கொள்ளப் படும் அக்கிரமிப்புக்களைத் தவிர்த்தல்.
9. அரச காணிப் பங்கீடுகள், வீடமைப்புத் திட்டங்களில் முஸ்லிம்களது விகிதாசாரத்திற்கேற்ப பங்கீடுகளை மேற்கொள்ளுதல்.
10. கண்டி கொழும்பு நுவர எலிய போன்ற நகர்களில் நீண்டகாலமாக முன்வைக்கப் படும் முஸ்லிம் ஆண்கள் மற்றும் மகளிருக்கான உயர்தர பாடசாலைகளை அமைத்துக் கொடுத்தல்.
11. அடிப்படை அரச சேவைகளான கடவுச் சீட்டு, வாகான சாரதி அனுமதிப் பத்திரம், கடவுச் சீட்டு என்பவற்றை கிழக்கிலங்கையில் பெற்றுக் கொள்ளும் துரித சேவைகளை வழங்குதல்.
12. ஒலுவில் துறைமுகத்தை மீன்பிடித் துறைமுகமாக மாற்றி அறிவித்து கடலரிப்பிலிருந்து கரையோரப் பிரதேசங்களை காக்கும் நடவடிக்கைகளை எடுத்தல்.
13. கரையோரப் பிரதேசங்களில் நெருக்கடியாக வாழும் மக்களிற்கு அண்டிய பிரதேச அரச காணிகளில் புதிய கிராமங்களை கிராமோதய திட்டங்களின் கீழ் உருவாக்குதல்.
14. அரச நிறுவனங்கள், கூட்டுத் தாபனங்கள், அதிகாரசபைகளில் முஸ்லிம்களது விகிதாசாரத்திற்கு ஏற்ப தொழில் வாய்ப்புக்களை வழங்குதல்.
15. தொழில் மற்றும் உயர் தொழிநுட்ப கற்களை, மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு தொழிற் சந்தைகளுக்கேற்ற நிபுணத்துவங்களை இளைஞர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் ஏற்பாடுகளை செய்தல்.
16. புத்தளம் அருவக்காட்டில் மேற்கொள்ளப் படுகின்ற குப்பை மீள் சுழற்சி செயற்திட்டத்தை உடனடியாக நிறுத்தி தேசம் முழுவதற்குமான மாற்றுத் திட்டங்களை அறிமுகம் செய்தல்.
17. ......
18. .......
19......
20......
Inamullah Masihudeen
21...
ReplyDelete22...
99....
MUSLIM MINISTERS SHOULD CONSIDER WHEN MAKING DEAL WITH MR OR RANIL THIS TIME....
ReplyDeleteHOEPE LEARNED PEOPLE WILL ADD MORE TO THIS LIST AND MAKE IT AVAILABLE TO HANDS OF OUR PARTY LEADERS....
Good idea bro
ReplyDeleteமேற்சொன்ன அத்தனை விடயங்களையும் இரண்டு விடயங்களுக்கும் அடக்கி நம் சமூகத்தை காப்பார்கள் எம் சாணக்கிய, உரிமை போராட்ட குஞ்சுகள்,
ReplyDelete1) ஒரு முழு அமைச்சும் இரண்டு பிரதி அமைச்சும்
2) சில பணப்பெட்டிகள்
For the implementation of all the demands will be promised by either party to get the support and none of them will be implemented in future.
ReplyDelete4, 6 & 8 are NPC’s responsibility and done well
ReplyDeleteஅண்ணன் அஜன், கொஞ்சம் தள்ளி நின்னு விளையாடுங்க... நாடு இருக்கிற பிரச்சனைல நீங்க வெற நடுவுல வந்து காமெடி பண்ணிக்கிட்டு...
ReplyDeleteCorrect
ReplyDeleteதம்பி அலி,
ReplyDeleteஎப்போ இந்த நாட்டில பிரச்சனையில்லாமல் இருந்தது??
100.அரபு மொழியை அரச கரும மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும்😉
ReplyDelete