Header Ads



கிழக்கு மாகாணத்தில் நல்லிணக்கம் என்ற போர்வையில் தமிழர்களின் இருப்புகள் நசுக்கப்படுகின்றன - வியாழேந்திரன்

கிழக்கு மாகாணத்தில் நல்லிணக்கம் என்ற போர்வையில் தமிழ் மக்களின் இருப்புகள் நசுக்கப்படுகின்றன  என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

செங்கலடி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று கல்லூரி முதல்வர் குமாரசாமி அருணாசலம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கடந்த ஆண்டு தமது திறமைகளை வெளிப்படுத்திய 490 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அண்மையில் நடைபெற்ற இலங்கை நிருவாக சேவை பரீட்சை, தாதியர் தேர்வுப் பரீட்சை, தபால் உள்ளக கணக்காய்வு பரீட்சை என்பவற்றில் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.

வெளிமாவட்டத்திலுள்ள அரசியல்வாதிகளின் சிபாரிசுகளினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சாதாரண சிற்றூழியர்கள் முதல் அனைத்துத் துறைகளிலும் தென்னிலங்கையில் உள்ளவர்களை கொண்டு இடைவெளிகளை நிரப்புகிறார்கள்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பினை கேள்விக்குறியாக்கும் வகையில் தேசிய மற்றும் மாகாண நிகழ்ச்சி நிரலின் கீழ் தமிழர்களுடைய நிலங்கள் வளங்கள் பலவிதத்திலும் அபகரிக்கப்படுகின்ற நிலமை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கிறது எனவும் சுட்டிக்காட்டினார்.

2 comments:

  1. True. இதற்கு எதிராக மக்களை திரட்டி, பௌத்த பிக்குகளையும் சேர்த்து போராடலாம் தானே

    ReplyDelete
  2. அது என்னடா அரசாங்கத்திற்கு எதிராக ஒருபக்கம் பிரிவினைவாதத்தை தூக்கிபிடித்துக்கொண்டு அபாவிருத்தியையும் கேட்கிறீர்கள்? உன்னைப்போன்ற மொக்கு அரசியல்வாதிகள் அன்றிலிருந்து இன்றுவரை தூக்கிப்பிடிக்கும் இத்துப்போன ஈழம், வடகிழக்கு இணைப்பு போன்ற நடக்காத கனவுகளை தூக்கியெறிந்துவிட்டு அரசாங்கத்தில் அங்கம் வகித்து அமைச்சுபதவிகளை பெற்று உண்ட மக்களுக்கு சேவைகள் செய்யலாமே. அதை விடுத்து முஸ்லிம் அமைச்சர்களை பற்றி பேச சுரணையில்லையா? அவன் அவன் அவண்ட சமுதாயத்தை தான் முன்னேற்றபார்ப்பான். உனக்கும் அக்கறையிருந்தால் நீ தான் அதற்கான முயற்சியை செய்ய வேண்டும். அதைவிடுத்து முஸ்லிம் சமுதாயம் பெறுவதை பொறாமையால் பறிக்க நினைத்தால் பயங்கரவாத புலிகளைபோல் தடம் தெரியாமல் அழிந்து போவீர்கள்

    ReplyDelete

Powered by Blogger.