திகன கலவரத்தின் போது, பொலிஸார் வேடிக்கை பார்த்தனர் - அமித் வீரசிங்க
திகன கலவரத்தின் போது பொலிஸாரே கலவரத்தை தூண்டிவிட்டதாக, சிறையில் இருந்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள அமித் வீரசிங்க கூறியுள்ளார்.
தன்னோடு நாமல் குமார என்பவர் கைது செய்யப்பட்டதாகவும், அவருக்கு பொலிஸ்மா அதிபர் வழங்குவதாக கூறிய 5 லட்சம் ரூபாவை டி ஐ ஜி நாலக சில்வா பெற்றுக்கொண்டு, அதனை வழங்காததால் நாலக சில்வா நாமல் - குமார இடையே மோதல் வெடித்து அனைத்து சூழ்சிகளையும் அவர் வெளியிட்டதாகவும் அமித் வீரசிங்க வெளியிட்டுள்ளார்.
திகன கலவரம் நடைபெற்ற போது பொலிஸார் வேடிக்கை பார்த்தாகவும் பாதுகாப்பு பிரிவினர் கலவரத்தை தூண்டியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது..
இந்த சைத்தானின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மற்றொரு கோணத்தில் இனத்துவேசத்தைத்தூண்டுவதாகவே அமையும்.மிகவும் புத்திசாதுர்யமாக இது போன்ற விடயங்களைக் கையாள வேண்டும்.இந்த செய்தியை வௌியிட்டர் என்ற வகையில் பத்திரிகையாசிரியரும் புலனாய்வின் கட்டுப்பாட்டுக்குச் செவிசாய்க்கும் தேவையற்ற அம்சங்கள் பத்திரிகையாசிரியர் என்றவகையில் உங்களையும் பாதிக்கும்.
ReplyDelete