Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகள் - ஜம்மியா சந்திப்பு, முக்கிய தீர்மானங்களுடன், உடன்பாடும் எட்டப்பட்டது

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தை அமுல்­ப­டுத்தும் காதி நீதி­மன்­றங்கள் தர­மு­யர்த்­தப்­ப­டு­வ­துடன் சில மாவட்­டங்­களில் அவை நீதிவான் நீதி­மன்­றங்­களின் தரத்தை ஒத்­த­தாக அமைய வேண்டும் என முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­ட­னான ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் கலந்­து­ரை­யா­டலில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­ட­னான அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் கலந்­து­ரை­யாடல் நேற்று முன்­தினம் இரவு கொழும்பில் உலமா சபையின் தலைமைக் காரி­யா­ல­யத்தில் இடம்­பெற்­றது. உலமா சபையின் மேற்­கு­றிப்­பிட்ட தீர்­மா­னத்தைப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அங்­கீ­க­ரித்­தனர்.

காதி நீதி­ப­தி­களின் தரமும் உயர்த்­தப்­பட வேண்­டு­மெ­னவும், காதி நீதி­ப­தி­க­ளாக நிய­மனம் பெறு­ப­வர்­க­ளுக்கு ஒரு வருட காலத்தில் பயிற்­சி­களின் பின்பு பரீட்­சை­யொன்று நடாத்­தப்­பட்டு பரீட்­சையில் சித்­தி­ய­டை­ப­வர்­க­ளுக்கே பத­விக்­காலம் நீடிக்­கப்­பட வேண்­டு­மெ­னவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. 

தாப­ரிப்பு வ-ழக்­கு­களில் தாப­ரிப்பு செலுத்­தாத பிர­தி­வா­தி­க­ளி­ட­மி­ருந்து தாப­ரிப்பு பணத்தைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு தற்­போ­துள்ள சட்­டத்தின் கீழ் காதி நீதி­பதி நீதிவான் நீதி­மன்­றங்­களை நாட வேண்­டி­யுள்­ளது.  வலி­யு­றுத்தக் கட்­ட­ளை­களை நீதிவான் நீதி­மன்­றுக்கு அனுப்ப வேண்­டி­யுள்­ளது. இந்த அதி­காரம் காதி நீதி­ப­தி­க­ளுக்கே வழங்­கப்­பட வேண்டும் என்றும் தீர்­மா­னிக்­கப்­பட்­ட­துடன் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் இதனை அங்­கீ­க­ரித்­தனர். முஸ்லிம் விவா­க­ரத்துச் சட்­டத்­தி­ருத்த சிபா­ரி­சு­களில் வயது, மத்தாஹ், பெண் காதி நிய­மனம், ‘வலி’ என்­பன பற்­றியும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டன. 

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை தனது நிலைப்­பாட்­டினை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்குத் தெளி­வு­ப­டுத்­தி­யது. பெண்கள் காதி­க­ளாக நிய­மிக்­கப்­ப­டாது காதி நீதி­மன்­றங்­களில் ஜுரி­க­ளாக, ஆலோ­சனைச் சபையில் உறுப்­பி­னர்­க­ளாக, விவாக பதி­வா­ளர்­க­ளாக நிய­மனம் பெறு­வதை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஏற்­றுக்­கொண்­டனர். 

‘வலி’ இல்­லாது திரு­மணம் நடை­பெ­றக்­கூ­டாது என்­ப­திலும் உடன்­பாடு காணப்­பட்­டது. பெண்­களின் திரு­மண வய­தெல்லை 16 – 18 ஆக இருக்க வேண்­டு­மெ­னவும் இவ்­வ­ய­துக்குக் குறைந்த பெண்­களின் திரு­மணம் விசேட தேவை நிமித்தம் நடை­பெற வேண்­டு­மென்றால் காதி நீதி­ப­தியின் அனு­மதி பெறப்­பட வேண்டும் என்­பதும் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டது.

உலமா சபையுடனான சந்திப்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதி அமைச்சர் அமீர் அலி, அலிசாஹிர் மௌலானா, பைசல் காசிம், ஹரீஸ், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர்கள் முஜிபுர் ரஹ்மான், அப்துல்லா மஹ்ரூப், பிரதியமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். உலமா சபையின் சார்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக் உட்பட பிரதிநிதிகள் பங்கு கொண்டிருந்தனர்.

1 comment:

  1. இந்த தீர்மானத்ததை நிறைவேற்ற வேண்டுமாயின் முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லோரும் தங்களிடையே காணப்படும் வேற்றுமையைக் களைந்துவிட்டு, ஜம்யியதுல் உலமா சபையால் மேற்கோல் காட்டப்பட்ட தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தில் பல மாற்றங்களை உண்டு பண்ணி சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும்.
    மேலும், காழி நீதிபதிகளாக நியமிக்கப்படக் கூடியவர்கள் தங்களின் பயிற்சி நெறியை முடித்து குறித்த பரீட்சையில் சித்தி பெற வேண்டும்.
    பெண்களை ஆலோசனை சபையில் இணைத்துக்கொள்ள வேண்டும்.
    அத்தோடு, காழி நீதிமன்றங்கள் நாட்டின் சட்ட நீதிமன்றங்களுக்கு நிகராக தரம் உயர்த்தப்பட வேண்டும்.
    இறுதியாக, இதை வைத்து அரசியல் செய்யும் சில முஸ்லிம் அரசியல்வாதிகளும், பெயரும் புகழும் தேடும் முஸ்லிம் பெயர் தாங்கி பெண்கள் அமைப்புகளும், சின்னச்சிறு இஸ்லாமிய அமைப்புகளும் இவைகளிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.