Header Ads



நாலக்கவின் அலுவலகத்திற்கு முத்திரையிடப்பட்டது

கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரியின் பணியகம், முத்திரையிட்டு மூடப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறிலங்கா அதிபர் மற்றும், முன்னாள் அதிபர் உள்ளிட்டவர்களைப் படுகொலை செய்ய திட்டமிட்டார் என்று, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்த பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வா மீது, ஊழல் எதிர்ப்பு செயலணியைச் சேர்ந்த நாமல் குமார குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து, நாலக சில்வாவுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்,  தற்காலிகமாக அவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். பின்னர், அவர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார்.

நாலக சில்வாவுக்கு எதிரான விசாரணைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், கொழும்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் அமைந்துள்ள நாலக சில்வாவின் பணியகம், முத்திரையிட்டு மூடப்பட்டுள்ளது.

அவரது பணியகத்தில் இருந்த இரண்டு மடி கணினிகளும், விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுப் பிரவினரால், எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.