Header Ads



அக்குறணை உறவுகளே, இதைச் செய்வீர்களா...?


அக்குறணை  வெள்ளப் பெருக்கு: 
ஒன்றிணைந்த கவனயீர்ப்பு போராட்டம் அவசியம்.

பிங்கா ஓயாவிற்கு குறுக்காகவும் அதன் இருமறுங்கிலும் பக்கவாட்டு ஒதுக்குப் புறங்களில் கட்டப்பட்டுள்ள அனைத்து அனுமதியில்லா கட்டடங்களையும் உடைத்து நீக்கி கால்வாயை அகலமாக ஆழமாக புனரமைக்க ஊர்மக்கள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டு மஹஜர் கொடுங்கள். ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்துங்கள்.

ஊரின் அனர்த்தங்களில் வாழ்வு நடத்தும் தனவந்தர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும்.

மக்களின் ஏகோபித்த வேண்டுகோள் இல்லாமல் வாக்கு வங்கியை நம்பியே அரசியல் பிழைப்பு நடத்த வேண்டியுள்ள அமைச்சர்களால் மந்திரிமார்களால் எதுவுமே செய்ய முடியாது. மாட்டார்கள்.

பிங்கா ஓயா புனரமைப்பிற்கென ஒரு அபிவிருத்தி திட்டத்தை அமைச்சர் ஹகீமின் கீழுள்ள நகர அபிவிருத்தி அமைச்சின் பொறியியலாளர்கள் தயாரித்து போதிய நஷ்டயீடுகள் மாற்று இடங்கள் வழங்கப்படுவதனை அதன் மூலம் உறுதி செய்தல் தீர்வை நோக்கிய நகர்வாக இருக்கும்.

அமைச்சர்கள் ஹலீம் , பைசர் முஸ்தபா, கபீர் ஹாஷிம், றிஷாத் உற்பட பெரும் பான்மை அமைச்சர்களினதும் ஆதரவை அமைச்சரவை பத்திரத்திற்கு பெற்றுக் கொடுக்க ஊர்மக்கள் ஒரூமித்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

வெறுமனே திடீர் விஜயம், பார்வையிடல், படமெடுத்தல், அறிக்கைவிடல் படலத்தோடு அனர்த்த நிவாரண அறிக்கையை சமர்ப்பித்து விட்டு தப்பித்துக் கொள்ள மாவட்ட மற்றும் சமுதாய அரசியல் பிரமுகர்கள் முனையக் கூடாது.

-Inamullah Masihudeen-


2 comments:

  1. That is true protecting environment is part and parcel of higher objectives of Islamic law ..
    To build any building that block the town and village is not acceptable in Islamic Law ..
    Salafi groups spend more more time of issue of Bida' and shirk Forget to preach higher objectives of Islamic law ...as proposed by Imam Juwaini and Ghazali..

    ReplyDelete

Powered by Blogger.