அரசே அரசே 6 மாகாணசபைகளுக்கும், உடன் தேர்தலை நடத்து - முஸ்லிம் அமைப்புக்கள் கோரிக்கை
பதவிக் காலம் முடிவுற்றுள்ள ஆறு மாகாணசபைகளுக்கும் தாமதமின்றி பழைய தேர்தல் முறையில் தேர்தலை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஸ்லிம் இயக்கங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரமுகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதனன்று முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்சிலின் ஏற்பாட்டில் அதன் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் அங்கு கூடியிருந்த முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், முஸ்லிம் இயக்கங்களின் பிரதிநிதிகள், முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகள் தேர்தலை விரையில் நடத்துமாறு அரசினை வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றினர்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் எம்.சுபைர்தீன்,
நல்லாட்சிக்கான மக்கள் முன்னணி முக்கியஸ்தர் நஜா முகம்மத்,
தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளர் அசாத்சாலி,
அகில இலங்கை ஜெமியதுல் உலமா
தேசிய சூரா கவுன்சில்,
காத்தான்குடி பள்ளிவாசல் சம்மேளனம் உட்பட
பல முஸ்லிம் இயக்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட இக்கூட்டத்திலே இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக முஸ்லிம் கவுன்சிலின் செயலாளர் அஸ்கர் கான் தெரிவித்தார்.
Mahinda has started his game through Muslim parties......
ReplyDelete