Header Ads



இலங்கையின் 4 அமைச்சர்களுக்கு, றோவுடன் தொடர்பு

இந்தியாவின் பிரதான புலனாய்வு அமைப்பான ‘றோ’வுக்கு, சிறிலங்கா அமைச்சரவையிலுள்ள நான்கு அமைச்சர்கள் தகவல்களை வழங்கி வருகின்றனர் என்று அமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலருமான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பெலியத்தையில் நேற்று முன்தினம் நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களின் கூட்டத்தில் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

‘றோ’வுடன் தொடர்புகளை வைத்திருக்கின்ற நான்கு அமைச்சர்களி்ல் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும்.

இவர்கள் தான், அமைச்சரவைக் கூட்டத்தில், தன்னைக் கொல்லும் திட்டத்தை’றோ’ கொண்டிருப்பதாக, சிறிலங்கா அதிபர் கூறியதாக பொய்யான தகவலை கூறியிருந்தனர்.

நாட்டின் நலனுக்காக, அவர்களை அடையாளம் காணும் நேரம் வந்துள்ளது.

‘றோ’வுக்கு தகவல் வழங்குபவர்களை சிறிலங்கா அதிபரும், பிரதமரும் கண்டுபிடித்து அவர்களை வெளியேற்ற வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.