Header Ads



புத்தளத்தில் 4 வது நாளாகவும் போராட்டம்


கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை, புத்தளம் அறுவக்காடு பிரதேசத்தில் கொட்டும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, புத்தளம்- கொழும்பு முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டம், இன்று (02) நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தன்னார்வ தொண்டு அமைப்புக்கள், பொதுமக்கள், மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள்,மத தலைவர்கள் என பலர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள இடத்துக்கு,  நேற்று (01), சென்றிருந்த பௌத்த, இஸ்லாம், இந்து மற்றும் கிறித்தவ சமயத் தலைவர்கள், இந்த திட்டத்துக்கு எதிராக, கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

‘கொழும்பு குப்பை புத்தளத்துக்கு வேண்டாம்’, ‘குப்பைகளால் சூழலை மாசுபடுத்தாதே’,  ‘உயிர் கொல்லும் கொடிய நோய்களில் இருந்து எதிர்கால சந்ததியினரை பாதுகாப்போம்" போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதேவேளை, கொழும்பில் சேர்க்கப்படும் குப்பைகள் புத்தளம்- அறுவக்காடு குப்பை சேகரிப்பு மத்திய நிலையத்துக்கு கொண்டு  செல்லும் நடவடிக்கை இன்று முதல் (01), தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-ரஸீன் ரஸ்மின்-

No comments

Powered by Blogger.