உலக முஸ்லிம் லீக்கின் 43ஆவது அதியுயர் சபைக் கூட்டம், ஹிஸ்புல்லாஹ் சவூதி பயணம்
உலக முஸ்லிம் லீக்கின் 43ஆவது அதியுயர் சபைக் கூட்டம் எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதி மக்காவில் நடைபெறவுள்ளது. இதில் உலக முஸ்லிம் லீக்கின் தெற்காசிய பிரதிநிதியாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொள்ளவுள்ளார்.
சவூதி அரேபியாவின் மக்கா நகரைத் தலைமையகமாகக் கொண்டு உலகலாவிய ரீதியில் இயங்கும் பலம் வாய்ந்த அமைப்பான உலக முஸ்லிம் லீக்கின் (ராபிததுல் ஆலம் அல் இஸ்லாமி) அதியுயர் சபை உறுப்பினராக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் 43ஆவது அதியுயர் சபைக் கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி மக்காவில் நடைபெறவுள்ளது. இதில் தெற்காசிய பிரதிநிதியாக இராஜாங்க அமைச்சர் பங்கேற்கவுள்ளார்.
இதேவேளை, குறித்த அதியுயர் சபைக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சருக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்படவுள்ளதுடன், எதிர்வரும் ஐந்து வருடத்துக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
உலக முஸ்லிம் லீக்கின் அதியுயர்சபை அமர்வில் கலந்து கொள்ளவிருக்கும் அமைச்சர் ஹிஸ்புல்லா அவர்களுக்கு எமது வாழ்த்துக்களையும் மரியாதைகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். இதன்மூலம் இலங்கைக்கும் இங்குவாழ் முஸ்லிம்களுக்கும் எதிர்காலத்தில் பெருமை தேடித்தருவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ReplyDelete