அக்குறணைக்கு வந்த வெள்ளத்தினால், 400 மில்லியன் ரூபாய் நட்டம்
அக்குறணை பிரதேசத்தில், அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாகவும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாகவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்குக் கொண்டுசெல்வதோடு, அதற்கான தீர்வைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமுடன் இணைந்து, விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக, நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அக்குறணை நகரில் ஏற்பட்ட வெள்ளத்தினால், 400 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பாதிப்புகள் தொடர்பாகவும் அதற்கான இழப்பீடுகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலும், அக்குறணை அஸ்னா பெரிய பள்ளிவாசலில், நேற்று முன்தினம் (07) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, அமைச்சர் ஹக்கீம், மேற்கண்டவாறு கூறினார்.
தன்வினை தன்னைச்சுடும். ஆற்றினை அடைத்தால் தண்ணி எவ்வாறு ஓடுவது?
ReplyDeleteto my knowledge not all akurana businessmen are guilty of blocking the river flow. so authorities must take action to remove the illegal structures and punish the law breakers soon before disaster strikes again.
ReplyDelete