கொழும்பில் குப்பைகளை அகற்ற, தினமும் 3½ கோடி செலவு
கொழும்பில் நாளாந்தம் கொட்டப்படும் குப்பைகளை அப்புறப்படுத்துவதற்காக ஏனைய உள்ளூராட்சி மன்றங்களை விடவும் கொழும்பு மாநகர சபை பெருமளவான நிதியினை செலவிட வேண்டியேற்பட்டுள்ளதாக கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் சேரும் குப்பைகளை அகற்றுவதற்கு கொழும்பு மாநகர சபை தினமொன்றுக்கு 3½ கோடி ரூபா செலவிடுகிறது.
மாதாந்தம் 108 கோடி ரூபா இதற்காக செலவிட வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.
கொழும்பு நகரில் தினம் 600 மெற்றிக்தொன் குப்பை சேகரிக்கப்படுகிறது.
இந்தக் குப்பைகளை அகற்றுவதற்கு இரு தனியார் நிறுவனங்களும் கெரவலப்பிட்டிய தாழ்நிலம் அபிவிருத்திச்சபையின் குப்பை அகற்றும் பிரிவும் நியமிக்கப்பட்டுள்ளன.
இந்த நிறுவனங்களுக்கே குப்பைகளை அகற்றுவதற்காகக் குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.
????? very big amount..OFFFF
ReplyDeleteIt's still cheaper than the fund she allocated to renovate her toilet ^_^
ReplyDeleteIf you remove your (Miss Rosy) commission and all other culprit politicians commissions it will go down/ up to lest than 5 Hundred thousands(5 Laks).
ReplyDeleteIts shameful to CMC that they using pvt firm even its not sri lankan owner!
ReplyDelete