இலங்கையில் 2 பிரதமர்கள் - மிகப்பெரும் குழப்பம் ஏற்பட வாய்ப்பு
இலங்கையின் பிரதமராக, மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதோடு, நாட்டின் பிரதமராக தானே தொடர்ந்து உள்ளதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள நிலையில், அரசியல் பிரச்சினைகள் எழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசமைப்புத் தொடர்பான சிக்கல்கள் எழவுள்ள நிலையில், டுவிட்டர் இணையத்தளத்திலும், இது தொடர்பில் குழப்பம் காணப்படுகிறது.
ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ இருவரும், தங்களது டுவிட்டர் கணக்கில், தாங்களே பிரதமர் என்று குறிப்பிட்டுள்ளனர்.
சட்ட ஆலோசனைகளை ரணில் சிறப்பாகக் கையாளும் பட்சத்தில் நிச்சியம் சட்டம் அதன் பங்கைச் சரியாகச் செய்தால் இந்த நாட்டுக்கு நிச்சியம் மற்றொரு அவலம் காத்திருக்கின்றது. ஏற்கனவே, பொருளாதாரம் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து எந்த உறுதியான இலக்கும் இல்லாமல் பொருளாதாரமும் சரிந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் மக்களின் ஆணையைத் துச்சமாக மதித்து தனது இருப்பை மாத்திரம் இலக்காக வைத்து மைத்திரி மேற்கொண்ட இந்த முற்றிலும் சுயநலத்தை மாத்திரம் இலக்காகக் கொண்டு இந்த நாட்டுச் செய்த இந்த அவலம் நிச்சியம் நாட்டு மக்களுக்கு பாரதூரமான விளைவுகளைக் கொண்டுவரும் என மாத்திரம் இப்போது கூறிவைக்கலாம். துரதிருஷ்டவசமாக இந்த நாட்டில் அரசியலின் பிரதான வகிபாகத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் சுயநலவாத,பதவியும் பட்டமும் ஆயிரமாயிரம் வருடங்கள் தம்மைச் சுற்றி இருக்கவேண்டும் என்ற மமதையில் மக்களின் ஆணையையும்,எதிர்பார்ப்புகளையும் துச்சமாக மதித்துச் செயற்படும் இந்த பதவிப் பித்தன்கள் இந்த நாட்டுக்கு கொண்டுவருவது அழிவும் அவமானமும் மக்களுக்கு வறுமையும் உலக அரங்கில் கேவலம்,அபகீர்த்தியும் மாத்திரம் தான். இப்போதாவது இந்த நாட்டு மக்கள், பெரும்பான்மை,மதம்,இன வேறுபாடுகளைக் களைந்து மக்களின் நலத்துக்கும் நாட்டின் மேன்பாட்டுக்கும் உழைக்க முன்வந்து தியாகத்துடன் தங்கள் இலக்கை நோக்கி முன்னேறினால் நிச்சியம் இந்த நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் ஒரு விடிவு இருக்கின்றது. ஆனால் இந்த வீணாப்போன அரசியல்வாதிகளையும்,சுயநலத்தை மாத்திரம் கொண்டு இயங்கும் போக்கிரிகளையும் ஒதுக்கி நல்ல சிந்தனையும் தூரநோக்கும் தியாக உணர்வுடன் மக்கள்,நாடு என்ற இலக்கில் துய்மையுடன் இயங்கும் ஒரு மக்கள் குழுவை உருவாக்கி இந்த நாட்டு மக்களையும் நாட்டையும் காப்பாற்ற நிதானமாகச் சிந்தித்து செயலாற்றும் ஒரு அமைப்பை உருவாக்க நாம் அனைவரும் செயல்பட ஒன்றுபடுவோம்.இந்த போக்கிரி ஆட்சியாளர்களைத் துரத்தியடிக்க இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
ReplyDeleteஅடபோங்கப்பா நான்தான் இந்த நாட்டின் உன்மையான பிரதமர். ஷபாக்ஷ். கடுமையான போட்டி ஹிஹி
ReplyDeleteஹிஹி ஹிஹி