ஐ.தே.க. 2 ஆவது விக்கெட்டை இழந்தது - வசந்த பல்டி, மகிந்தவுக்கு ஆதரவளிப்பதாக அறிவிப்பு
பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கே தமது ஆதரவு என ராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டமை மகிழ்ச்சி அளிப்பதாகவும், புதிய பிரதமரை வாழ்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் வெட்கம் கெட்ட மற்றும் சுயநலவாதியிடமிருந்து இந்த நாடு மீண்டுள்ளமை மகிழ்ச்சி அளிக்கின்றது எனவும், ரணில் இந்த நாட்டை சீரழித்துவிட்டார் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தனது மூதாதையர்களின் உழைப்பில் கட்டியெழுப்பப்பட்ட கட்சி, பாரியளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய பிரதமருக்கு பூரண ஆதரவளிக்கப்படும் எனவும் ஜனாதிபதியின் தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க நாட்டின் முதல் பிரதமர் டி.எஸ். சேனாநாயக்கவின் பேரன் என்பது கூறியுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியினால் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியும் என கூறி வரும் நிலையில் இரண்டு உறுப்பினர்கள் தற்போதைக்கே மஹிந்த பக்கம் தாவியுள்ளனர் என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும்.
Post a Comment