Header Ads



வடக்கு முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்புக்குள்ளாகி 28 வருடங்களும், தீர்வுகாணப்பட வேண்டிய சவால்களும்..!!

வடபுல முஸ்லீம்கள் புலிகளின் ஆயுத முனை வெளியேற்றப்பட்டு இருபத்தெட்டு வருடம் கடந்துள்ளன. இந்த  நிலையில்  எமது பூர்வீக இருப்பில் அசையும் அசையா பலகோடி பெறுமதியான சொத்துக்களையும் இழந்து, தன்மானத்துடன் வாழ்ந்த எம்மவர்கள இன்று வரையில் மனானசீக  ரீதியான மனஉளச்சல்களுக்கும் வேதனைகளுக்கும் ஆளாகியுள்ளனர்.மேலும் பொருளாதார ரீதியான பாரிய சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும்  முகங்கொடுத்து வருகின்றனர்.

இந்த வகையில் முப்பது வருட யுத்தம் நாட்டின் தலைமைகளின் வழிகாட்டலினால் பெரும் தியாகத்தின் மத்தியிலும் பலஇழப்புக்களுக்குமத்தியிலும் முடிவக்கு கொண்டுவரப்பட்டள்ளன. மக்கள் கௌரவமாகவும் தன்மானத்துடனும் அவரவர் கலாசார மரபுகளைப்பேணி ஒற்றுமையுடன்   ஜனநாயக மரபுகளைப்பேணி ஒருமித்துவாழ அரசாங்கம் செயலாற்றி வருகின்றது .  இந்த  நிலையில் காத்திரமான மீழ்குடியேற்றப்பணிகள்  யுத்தம் முடிந்து         தொடர்ந்தும் ஒன்பது வருடங்கலாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இந்த நிலையில் வடபுல முஸ்லீமகளின் காத்திரமானதும் கட்டமைப்பு திட்டமிட்ட மீழகுடியேற்றம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல் நிர்வாக ரீதியாகவும் இனப்பாகுபாட்டு ரீதியாகவும் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே இந்த நிலையிலிருந்து வடக்கு முஸ்லீமகளை கௌரவமாக மீழ்குடியேற்றி வாழ்வாதார வசதிகளை வழங்குவதுடன் இவர்கள் இழந்த அனைத்து இழப்புக்களுக்கும் நஷ்ட ஈட்டை வழங்குவதுடன் , எற்கனவே நிகழ்ந்த நிகழ்வுகள் மீள் நிகழாமைக்கான நிலைமைகளை ஏற்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் தார்மீகப்பொறுப்பும் கடப்பாடுமாகும் .                     தீர்வுகாணப்பட வேண்டிய           வடக்கு முஸ்லீம்களின் சவால்களும் பிரச்சினைகளும் வருமாறு,

1.                                  வடக்கிலிருந்து  பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களுக்கான விஷேட ஜனாதிபதி ஆணைக்குழு உருவாக்க வேண்டியதுடன் அவசியத்தையும் இதன்மூலம் உண்மைத்தன்மையையும் வெளிப்படுத்தலை  உறுதிப்படுத்த முடியும்.
2 .                                          திட்டமான மீள்குடியேற்றக் கொள்கை உருவாக்கப்பட்டு, மதிப்பீடுகள் ,கணக்கெடுப்புக்கள் ,நஷ்டஈடுகள் கணக்கெடுக்கப்பட வேண்டியதுடன் ஒரு பொறிமுறையில் காத்திரமான அடிப்படையில் மீள்குடியேற்றம் கட்டம்கட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டும்
3 .                                அனைத்தையும் இழந்த அசையும் அசையா சொத்து்க்களுக்கு முழுமையான நஷ்ட ஈடுகள் வழங்கப்படல் வேண்டும்.
4 .                                மீள்குடியேற்றம் செய்யப்படாமல் எல்லை நிர்ணயம் செய்ப்பட்டிருப்பதால் ஏற்பட்டிருக்கும் பாதகநிலைலை ,மேலும் சனத்தொகைக்கு ஏற்ப பிரிக்கப்படாமை, நிலப்பரப்ிற்கு ஏற்ப பிரிக்கப்படாமை , முறையற்ற இணைப்பு என்பனவற்றால் ஏற்பட்டுள்ள பாரியளவான குறைபாடுகள் நிவர்த்திக்கப்படல் வேண்டும.                                           5 .                                        சீர்திருத்தம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டிய நடைமுறைக்கு மாற்றமாக மாகாணசபைச்சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதுடன் இதற்கு உண்மைத்தன்மையாக தேர்தல் தொகுதி பிரிக்கப்படவில்லை, அதற்கான எல்லைகள் பிரிக்கப்படல் வேண்டும் ,உறுப்பினர்கள் தீர்மானிக்கப்படல் வேண்டும் எல்லை நிர்ணயித்தல் முறையில் ஏற்படும் பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும் இவையாவும் செய்யப்படாமையும்    மீள்குடியேற்ற மந்தநிலையும் உள்ளன எனவே இவை கருத்தில் கொள்ளப்பட்டு வாழ்விட ,  குடியுரிமை உத்தரவாதப்படுத்ப்படல் வேண்டும.    6 .                                              பூர்வீக  காணி சுவீகரிப்பும் ,வர்த்தமானி அறிவிப்பும் , எம்மவர்களின் காணிகள் பிறருக்கு வழங்கப்பட்டிருக்கும் நிலையும், வழக்கில் காலதாமதம் பணம் வீண்விரயமால் , இருபத்தெட்டு வருடமாக காணியற்றஎம்மவர்களுக்கு அரசகாணி வழங்கப்படாமை, எம்மவர்களது காடாகிக்கிடக்கும் காணியை துப்பரவாக்கமுயற்சி செய்யும்போது அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் என்பன பாரிய சவாலாக காணப்படுகின்றன எனவே இவ்வாறான விடயங்களுக்கு விஷேடமான அதிகார நடைமுறைகளின் கீழ் தீர்க்கப்படல் வேண்டும்.                    7 .                                       காணியற்ற எம்மவர்களுக்கான அசர காணிகளை வழங்கி மீீள்குடியேற்ற நடைமுறைகளை துரிதப்படுத்த வேண்டும்
 8   .                                                 அரச அதிகாரிகளின் இன , மதவாத பாகுபாடுகளும் புறக்கணிப்புக்களும் இழுத்தடிப்புக்களும் முற்றுமுழுதாக இல்லாமல் செய்வதுடன் நேரடியான கண்கானிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தல்.
9 .                                       வடமாகாண சபை முஸ்லீம்களின் விடயத்தில் பாரபட்சமும் அக்கறையின்மையும் புறக்கணிப்புக்களை செய்து வரும் நிலை  விஷேட ஒம்பீட்ச்மன் முறையில் நேரடியான தீர்வுக்கான அதிகாரங்களை வழங்கல்வேண்டும்
10 .                      மீள்குடியேற்றத்தின் யதார்த்த நிலையும் அரச அதிகாரிகளின் இழுத்தடிப்புக்பளும், ஓரங்கட்ட்ப்பட்டு இல்லாமல் செய்து வரும் நிலைமைகளும் நேரடியான கண்காணிப்பில் நிவர்த்திக்கப்படல் வேண்டும்.
11 .                                                 தமிழ் அரசியல்வாதிகளின் கடும்போக்கு இனவாத செயற்பாடுகளும் முட்டுக்கட்டைகளும்  தடைகளும் இல்லாமலாக்கப்படல் வேண்டும்.
12  .       அத்தியாவசிய வசதிகளையும் அத்தியாவசிய பொருட்களையும் குறிப்பிட்ட காலகட்த்திற்கு வழங்கி மீள்குடியேற்றத்தின் இயல்பு நிலையை உருவாக்கபாபடல் வேண்டும்
13  .          வாழ்வாதார பொருளாதார ஊக்குவிப்புக்களையும் அதற்கான களநிலை சந்தர்ப்பவசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்
14 .               இளைஞர் யுவதிகளுக்காக அரச நியமனங்களின் போது விசேடமான கவனங்களையும் தொழில் முயற்சிகளுக்கான வழிகாட்டல்களையும்  மேற்கொள்ளப்படல் வேண்டும்
15 .       பொருளாதார வழங்களை உக்குவிக்கு முகமான தொழிற்துறை உபகரணங்களையும் மானிய உதவித்திட்டங்களையும் கிடைக்கச்செய்ய வேண்டும்
16 .   இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு நல்லெண்ணங்களை கட்டியெலுப்ப வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்  நல்ல அனுகுமுறைகளை வளர்கக வேண்டும்
17  .       மீள்குடியேற்ற நடைமுறையில் அவர்கள் தற்போது வாழும் பகுதிகளில் அவர்களின் பூர்வீக இடத்தில் குடியேறுவதற்கான காணிகள் ,பொருளாதார நிலைமைகளை வைத்து அவர்களுககு ஏதுவான வீட்டுத்திட்டநடைமுறைகளுக்கான கட்டமைப்பு வசதிவாய்ப்புக்களை ஏறபடுத்திக்கொடுத்தல்          

இவ்வாறாக சவால்களுக்கும்பிரச்சினைகளுக்கும் தீர்வுகானவேண்டிய விடயங்களாகும் எனவே ஐக்கிய நாடுகள் அமையத்தினால் கொண்டுவரப்படட  உண்மை ,நியாயம் ,மீள்நிகலாமை, இழப்பீட்கள் போன்ற நியதிகளின் அடிப்படையில் ஆயுத முனையில் பலவந்தமாக வெளியேற்றபபட்ட வடக்கு முஸ்லீம்கள் உரித்துடையவர்களாக இருப்பதனால் முக்கியமாக இவர்களும் முழுமையாக உள்வாங்கப்படடு பரிந்தரைக்கப்பட்டு நிவர்த்திககப்படவேண்டியவர்களுமாகும்  எனவே இதற்கான அனைத்து நடைமுறைகளையும் முன்னெடுத்து செயல்படுத்த விஷேட ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து உண்மைத்தன்மையை வெளிக்கொணரந்து இம்மக்களுக்கான சுபீட்சமான வாழ்வுக்கு வழிகோளுமாறும் நல்லாட்சி அரசை வேண்டுகிறாம்.

புத்தள வாழ் யாழ கிளிநொச்சி வெளியேற்றப்பட்ட சிவில் சம்மேளனம் தலைவர் அப்துல் மலிக் மௌலவி செயலாளர் ஹஸன் யைறூஸ்


No comments

Powered by Blogger.