Header Ads



24 மணித்தியாலத்துக்குள் பறிபோன முஸ்லிம்களின் காணிகள் - முஸ்லிம் Mp கள் நித்திரை

சம்மாந்துறைக்கு இரண்டு பாராளுமன்ற பிரதிநிதிகள் இருந்தும், மாவட்டத்துக்கு ஐந்து பாராளுமன்ற பிரதிநிதிகள் இருந்தும், இம்மாவட்டத்தின் பிரதேச சபைகளை சமமாக பகிர்ந்துகொண்ட கட்சிகளின் இரண்டு கெபினட் மந்திரிகள் இருந்தும் பலவெளி வாய்க்கால் மேற்குப்புறம் சுமார் 836 ஏக்கர் காணிகளின் ஆவணங்கள் சம்மாந்துறை பிரதேசத்தில் இருந்து அம்பாறை பிரதேசத்திற்கு எவ்வாறு 24 மணித்தியாலயத்திற்குள் மாற்றப்பட்டது என்று உறுதிக்கணிகளை கொண்ட இம்மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். 

அதுமாத்திரமல்லாமல் முஸ்லிம், தமிழ் மக்களுக்கு சொந்தமான இக்கணிகளில் சிங்கள இனத்தவர்கள் நேற்றும் இன்றும் விவசாய செய்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்நாடவடிக்கைகளை சம்மாந்துறை பொலீஸில் முறைப்பாடு செய்ய முடியாமல், அம்பாறை பொலீஸில் முறைப்பாடு செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு இம்மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். 1943 ஆம் ஆண்டின் நில அளவை சான்றுகளுடன், தொடர்ச்சியாக விவசாயம் செய்துவந்த காணிகள், யுத்த காலத்திலும் எவ்வித தடங்களும்மின்றி விவசாயம் செய்துவந்த காணிகள், நல்லாட்சியில் பறிக்கப்பட்டதற்கு யார் காரணம்?

அண்மையில் பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்ட எல்லை நிர்ணயத்தில் சம்மாந்துறையின் 10.28 ச.கி. பரப்பை கொண்ட 89 C, 89 B கிராம சேவகர் பிரிவுகள் அட்டாளச்சேனை தொகுதியுடன் சேர்க்கப்பட்டதை யாரும் மறந்திருக்கமாட்டீர்கள். தற்போது அம்பாரைக்கு மாற்றப்பட்டுள்ள காணிகள் இப்பிரதேசத்திற்கு உரியது என்பது மிக முக்கியமான விடயமாகும். பாராளுமன்றத்தில் ஒன்றை காட்டி, கச்சேரியில் எல்லைகளை மாற்றும் நடவடிக்கைக்கு துணைபோனது மக்கள் பிரதிநிதிகளா? அல்லது சம்மாந்துறை அரச அதிகாரிகளா? ஏற்கெனவே கொண்டவட்டுவன் வரை இருந்த சம்மாந்துறை எல்லை சுருங்குவதற்கு எவ்வாறு செயற்பட்டதோ அவ்வாறே இன்றும் மன்சூர் எம். பி. கோ சேர்மனாக இருக்கும் நிலையில் காய்நகர்த்தியுள்ளது அம்பாறை கச்சேரி.

இது சம்மாந்துறை காணிகளை இழந்த விவசாயிகளின் பிரச்சினை மாத்திரமல்ல, சம்மாந்துறை மக்களின் பிரச்சினை மாத்திரமல்ல, முஸ்லிம் சமூகத்தின் இருப்பு சம்மந்தமான பிரச்சினையாகும். முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினை மாத்திரமல்ல தமிழ் பேசும் சமூகத்தின் பிரச்சினையுமாக்கும். கரையோர மாவட்டத்தை பெறாமல் தடுப்பதில் பேரினவாதம் திட்டமிட்டு செயலாற்றும் இவ்வேளையில் முஸ்லிம் கட்சிகள் அபிவிருத்தி விழாக்கள் என்று பொன்னாடை கூத்தாட்டங்களை நடத்துவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது.

சாய்ந்தமருது பள்ளிவாசலின் முன்மாதிரியினை பின்பற்றி சம்மாந்துறையின் 52 பள்ளிகளுக்கு தலைமை தாங்கும் பள்ளிவாசல் தலைவர் முன்வர வேண்டும், சம்மாந்துறையில் இருந்து பறிபோகும் காணிகளை மீட்டு கரையோர மாவட்டத்தை பிரகடனப்படுத்துவதர்கு. பொன்னாடை போர்த்தி குத்தாட்டம் நடத்தும் அரசியல் வாதிகளை நம்பவேண்டாம். தமிழ் மக்களின் முன்மாதிரியை பின்பற்றி உங்கள் அரசியலை உங்கள் உரிமைக்காக பயன்படுத்த அம்பாறை ஜம்மியதுல் உலமா இம்மக்களை வழிநடத்த முன்வர வேண்டும்.

-Alif Sabri-

4 comments:

  1. இதுக்கு முழு பொறுப்பும் முஸ்லிம்களும் முஸ்லீம் அரசியல்வாதிகளும்

    ReplyDelete
  2. காணி, கல்வி, இன முறுகல் போன்ற இன்னோரன்ன பிரச்சினைகள் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் முஸ்லிம்கள் செறிவாக வாழக்கூடிய மாவட்டங்களில் ஏற்படுவதற்கு காரணிகள் எவை என ஆராய்ந்தால், அதற்கு மூல காரணம் அம்பாறை மாவட்ட முஸ்லிம் சமூகம்தான் என்பது வெள்ளிடைமலையாகும். யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இக்கூற்று நிதர்சனமான உண்மையாகும். அம்பாறை மாவட்டம்தான் இலங்கையின் முழு முஸ்லிம் சமுதாயத்திற்கும் முன்னோடியாக இருக்க வேண்டிய மாவட்டமாகும். இங்குதான் முஸ்லிம்கள் செறிவாக மாத்திரமல்ல பெரும் அறிவாளிகளும் செல்வந்தர்களும் பலதரப்பட்ட துறைகளில் நன்கு தேர்ச்சிபெற்றவர்களும் வாழ்ந்து வருகின்றனர். அதே சமயத்தில் பதவிகளுக்காக பொருளுக்காக டாம்பீக வாழ்க்கை வசதிகளுக்காக அரசியல் சோரம் போகின்ற கூட்டங்களும் இங்குதான் மலிந்து காணப்படுகின்றன. வாய் பேசா சமூக நலன் விரும்பிகள் இங்கு அதிகம். தேர்தல் காலங்களில் மாத்திரம் வாய்சவடால்களை அள்ளி வீசும் எங்கள் பாராளுமன்றப் பிரதிநிதிகள் இதுவரை இஸ்லாமிய சமூக உயர்ச்சிக்காக செய்த பங்களிப்புகள் என்ன? அதற்கு பாவம் மக்களும் துணை போய்க்கொண்டிருக்கின்றனர். இரண்டு மூன்று பாராளுமன்ற தேசியப்பட்டியல் பிரதிநிதிகள், பொறுப்பு வாய்ந்த அமைச்சுப் பதவிகள், இரண்டு மூன்று பிரதி அமைச்சர் பதவிகள் இவைகள்தான் இப்போது முஸ்லிம்களின் பெரும் தேவைகள், பிரச்சினைகள் என்று சமகால அரசியல் பூதங்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றன. இதற்காக சமூகம் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றது. எதற்குப் பேரம் பேச வேண்டும் என்ற விவஸ்த்தையே இல்லாத கூட்டமாக தற்போது முஸ்லிம் அரசியல் சமூகம் மாற்றப்பட்டுவிட்டது. இலங்கை முஸ்லிம்களுக்கு இன்று கணக்கிட முடியாத பிரச்சினகள் இருக்கின்றன. அதைப்பற்றிப் பேசவும் கேட்கவும் நாதில்லை. அப்படிப்பட்ட சமூகமாக எமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று முஸ்லிம் சமூகத்தை மாற்றி வைத்துள்ளனர்.

    இதன் தொடர் அடுத்து கீழே இருக்கும் எனது குறிப்பில் இடம் பெற்றுள்ளது

    ReplyDelete
  3. சாய்ந்தமருது பள்ளியின் முன்மாதிரியினை சம்மாந்துறைப் பள்ளி மாத்திரமல்ல அம்பாறை மாவட்டத்தின் சகல பள்ளிகளும் தொடர்ந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட பள்ளிகளும் தமக்கு முன்னுதாரணமாகக் கொண்டு தம்மைத் தாமே ஆட்சி செய்யக்கூடிய தலைவர் ஒருவரை தீர்க்கமான அடிப்படையில் கிழக்கின் சகல பகுதிகளுடனும் ஒன்றிணைந்து தெரிவு செய்தல் வேண்டும். மிகப் பொருத்தமானவர்களை ஆலோசனை சபைகளுக்கு தேர்வு செய்வதன் மூலம் எங்களுடைய பிரச்சிளைகளை நாங்களே அரசுடன் பேசித் தீர்ப்பதற்கு ஏதுவான வழிவகைகளைக் கண்டு பிடிக்க முடியும். நாங்கள் தலைநிமிர்ந்து சாத்வீகமான முறையில் எங்கள் உரிமைகளைக் கேட்கின்றபோது அவர்களும் தலை தாழ்த்தி எங்களுக்கு அவற்றை வழங்குவர்.

    ReplyDelete
  4. சம்மாந்துறைக்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், மாவட்டத்திற்கு ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் இரண்டு கபினற் அமைச்சர்கள் இருந்தும் என்ன பயன் என்ற அடிப்படையில் கேள்வி எழுப்புகிறீர்கள். மிகவும் நன்று. நான் (சும்மா – Just) சின்ன கேள்வி ஒன்னு உங்ககிட்ட கேட்கிறேன். எங்கட வேலையைப்பார்க்கவா பாருங்கää இவங்கள் இவ்வளவு கஸ்டப்பட்டு பணம் ரொக்கமா செலவழிச்சு பாராளுமன்றத்திற்குப் போயிருக்காங்க. “பேரம் பேசுதல்” ன்னா என்னங்க! அரசியல் மொழியில் சொல்றதென்டா – “ஓகே டா ஓகே. நீங்க கேட்கிறமாதிரி எல்லாம் நாங்க தாறோம். No problem!. நீங்க பதவியை எங்களைப்போல நல்லா அனுபவிங்க. வசதிகளை அனுபவிங்க. கொழும்பில் அரச செலவில் வீடு எடுங்க. சொகுசுக் கார் எடுங்க. உங்கட பிள்ளைகளை ரோயல்ää னுளுளுää யுயெனெய ன்னு சேருங்க. யார் வேனாம்னா. ஆனால் பாராளுமன்றத்திலயும் சரி வெளியிலயும் சரி உங்கட சமூகம் கிமூகம் ன்னு வாயை பொளக்கப்படாது. பொளந்தீங்க இருக்கிறதும் இல்லாம போய்த்துறும். சாக்கிரதை. வேணுமுன்னா நீங்களும் பாராளுமன்றத்தில் இருக்கீங்க என்கிறதைக் உங்கட மக்களுக்கு காட்டனும்னா கண்டியைப் பத்தியும் கொழும்பைப் பத்தியும் பேசுங்க. புரிஞ்சுதா - ன்னு கேட்டதற்கு ஆமா போட்டுத்தான் இந்தப் பொழப்பை இந்த பாராளுமன்ற கௌரவ உறுப்பினர்களும் நடாத்திக்கிட்டு இருக்காங்க. அவங்க உருப்படியா நம்மட சமூகத்திற்கு செய்த ஒன்னைச் சொல்லுங்க பார்ப்போம். என்னிக்கு இந்த பம்மாத்து காட்டுற வேலையை விட்டுப்போட்டுää பேரம் பேசுறதை விட்டுப்போட்டு தமிழ்க் கூட்டமைப்பு மாதிரி நடக்க ஆரம்பிக்கிறார்களோ – ச்சிக்; இவங்க நடக்க மாட்டாங்க. இவங்களை அப்பிடியோ விட்டுடுங்க. இவங்களெல்லாம் குட்டையில் ஊறிய மட்டைங்க.
    எவர் ஏற்றுக் கொண்டாலும் சரி இல்லையென்றாலும் சரி அம்பாறை மாவட்ட முஸ்லீம்கள்தான் இலங்கை குறிப்பாக கிழக்கு முஸ்லீம்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டியவர்கள். அதற்காகத்தான் இத்தனை கட்சிகள் அனைத்தும் அம்பாறை மாவட்டதிலேயே ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் இப்போது முக்கிய முஸ்லிம் கட்சியின் தலைமைப் பொறுப்பும் வேறு பல முக்கிய கட்சிப் பொறுப்புகளும் கிழக்கு முஸ்லிம் தலைமைகளிடம் இல்லை. அவர்கள் கட்சியில் வெறும் தலையாட்டிப் பொம்மைகளாகத்தான் இருக்கின்றனர். அஸ்ரப் ஐயா அவர்கள் பெரும் கஸ்டத்தின் மத்தியில் கட்சி ஆரம்பித்ததன் நோக்கம் முஸ்லிம்களின் தலைவர் கிழக்கிலிருந்து தோன்ற வேண்டும் என்பதற்காகவே. அன்னாரது “மௌத்”; தின் பின்னர் கல்முனையில் வைத்தே இரண்டு பிற மாவட்ட ஆசாமிகள் கதிரைக்கு கேவலமான முறையில் சண்டை போட்டமை இன்னமும் கிழக்கு முஸ்லிம்கள் முதிர்ச்சி அடையவில்லை என்பதையே காட்டாநிற்கின்றது.

    ReplyDelete

Powered by Blogger.