2019 ஆம் ஆண்டுக்கான, வரவுசெலவுத் திட்டம் தோற்கடிக்கப்படும் - எஸ்.பி.
அரசாங்கம் இம்முறை சமர்பிக்கும் 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 15 பேர் அணியின் சார்பில் கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற்காக ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருக்கு கட்டியெழுப்ப முடியாத பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் திட்டங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிடம் உள்ளன.
புதிய அரசாங்கத்தை அமைக்க அரசாங்கத்தில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன் எனவும் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Without knowing what is the content of the Budget, this guy is opposing. The aim is to topple the Govt. and loot the country.
ReplyDelete