தமிழ் மொழி மூலத்தில் 196 புள்ளிகளை பெற்ற 7 மாணவர்கள் (படங்கள்)
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிங்கள மொழி மூலம் இரண்டு மாணவர்கள் அதி கூடிய 199 புள்ளிகளைப் பெற்று தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.
பிலியந்தளை சோமவீர சந்திரசிறி வித்தியாலயத்தைச் சேர்ந்த புமித் மெத்னுல் வித்தானகே மற்றும் வெயங்கொடை சென். மேரிஸ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த குருகுலசூரிய சனுப்ப திமத் பெரேரா ஆகிய மாணவர்களே தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளனர். இதேவேளை தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தை எந்தவொரு தமிழ்மொழிமூல மாணவர்களும் பெறவில்லை.
இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களை 10 தமிழ் மொழி மூல மாணவர்கள் பெற்றுக்கொண்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
தமிழ் மொழி மூலம் முதலாம் இடத்தில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த மகேந்திரன் திகழொளிபவன் மற்றும் சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த நவஸ்கன் நதி ஆகிய இருவரும் 198 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
இதேவேளை வவுனியா நெலுக்குளம் சிவபுரம் ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த பாலகுமார் ஹரித்திக் ஹன்சுஜா 197 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி மூலத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
தமிழ் மொழி மூலத்தில் 196 புள்ளிகளை 7 மாணவர்கள் பெற்றுள்ளனர். பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியைச் சேர்ந்த நேஷிகா சேம்தினேஷ், பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த சுஹா சகீர் மொஹமட், அக்கரைப்பற்று சாஹிரா வித்தியாலயத்தைச் சேர்ந்த தஸ்லீம் ஷல்ஜி அஹமட், உன்னிச்சை 06 ஆம் மைல் கல் வித்தியாலயத்தைச் சேர்ந்த ஜெயராஜ் துஹின் டரேஷ், கிளிநொச்சி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த கனகலிங்கம் தெனூஷன், யாழ், திருக்குடும்ப கன்னியர் மடத்தைச் சேர்ந்த ஜெயந்தன் கிருஜனா, தெல்லிப்பளை மஹாஜனா கல்லூரியைச் சேர்ந்த சாருக்கா சிவனேஸ்வரன் ஆகிய ஏழு மாணவர்களும் 196 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி மூலத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.
லக்ஷ்மி பரசுராமன்
I don't like the way you singled-out the two Muslim students. The one who wrote the article didn't discriminate although she seems to be a Tamil and five out of the 7 students are from their community.
ReplyDeleteall the best for all of them and expect to receive your contribution to the society
ReplyDeleteI agree with you...
ReplyDeletestop racism
Congratulations
ReplyDeleteHello THURUVI
ReplyDeletedon't you see the name (Jaffnamuslim) where in URL. if you see then why you did not critics regards. this web for muslim community
here is no racism. hope u understand