தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 15 மாணவர்கள் கைது
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டடத்தை ஆக்கிரமித்து போராட்டம் நடத்திய 15 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டடத்தை, தொழில்நுட்ப துறையை சேர்ந்த சில சிங்கள மாணவர்கள், கடந்த இரண்டு வார காலமாக ஆக்கிரமித்து போராடி வருகின்றனர்.
பகிடிவதையில் ஈடுபட்ட குற்றத்துக்காக, பல்கலைக்கழகத்திலிருந்து விலக்கப்பட்டுள்ள, தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த 4 மாணவர்களை மீளவும் சேர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி, மேற்படி மாணவர்கள், நிர்வாகக் கட்டடத்துக்குள் புகுந்து, அதனை ஆக்கிரமித்து போராடி வருகின்றனர்.
இதன் காரணமாக, பல்கலைக்கழக நிர்வாக மற்றும் நிதி நடவடிக்கைகள் கடந்த இரு வாரங்களாக முடங்கியுள்ளன.
இந்நிலையில், பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்தை ஆக்கிரமித்துள்ள மாணவர்களை அங்கிருந்து அகற்றுமாறு, பொலிஸாருக்கு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே கட்டளை பிறப்பித்திருந்த போதிலும் மாணவர்கள் வௌியெற்றப்படவில்லை.
இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டடத்தை ஆக்கிரமித்து போராட்டம் நடத்திய 15 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
Put them in jail for 1 year
ReplyDeleteUniversity of
ReplyDeleteRagging ? OR Study ?