ஓட்டமாவடியில் முதலாவது VP வைத்திய நிபுணராக பரீட்
கல்குடா ஓட்டமாவடி பிரதேசத்தில் இருந்து முதலாவது VP வைத்திய நிபுணராக கொழும்பு தேசிய வைத்திய சாலையில் பணியாற்றும் வைத்தியர் சம்சுடீன் மொஹம்மட் பரீட் தெரிவாகியுள்ளமை மேலும் ஓட்டமாவடி பிரதேசத்திற்கு பெருமை சேர்க்கின்ற விடயமாக பார்க்கப்படுகின்றது.
கல்வி தகமைகளை கொண்ட குடும்ப பின்னணியினை கொண்ட இளம் வைத்திய நிபுணராக தெரிவாகியுள்ள பரீட் பாடசாலை காலம் முழுவதிலும் மிகவும் திறமையாக செயற்பட்ட மாணவன் என்பதற்கு அப்பால் ஓட்டமாவடி மத்திய கல்லூரி, வாழைச்சேனை அந்/நூர் தேசிய பாடசாலை மற்றும் மருதமுனை சம்ஸ் தேசிய பாடசாலைகளின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிட்டு கூறும் அளவிற்கு பெருமையான விடயமாக சமூகத்தினால் பார்க்கப்படுகின்றது.
இலங்கையில் எம்.Bபி.Bபி.எஸ் பட்டபடிப்பிற்கு பின்னர் பல்கலைகழக வைத்திய பீடத்தினால் நடாத்தப்படும் முறையான இரண்டு பரீட்ச்சைகளிலும் சித்தியடைந்து தற்பொழுது Senior Registar In Medicin கான பயிற்சிகளில் ஈடுபட்டுவருது குறிப்பிடதக்க விடயமாகும்.
அத்தோடு வைத்திய நிபுணர் பரீட் பாக்கிஸ்தானில் மிருக வைத்தியராக கடைமையாற்றும் சம்சுதீன் மொஹம்மட் சித்தீக் என்பவரின் சகோதரன் என்பதோடு பொலன்னறுவை வீனஸ் வைத்திய சாலையின் பணிப்பாளர் வைத்திய எம்.பி.எம்.அஜ்வாத் மற்றும் இங்கிலாந்தில் பாலியியல் வைத்திய நிபுணராக கடமையாற்றும் எம்.பி.தாஜுன்நிஷா ஆகியோர்களின் தாயின் சகோதரி வழி சகோதரனுமாவர் என்பதும் முக்கிய விடயமாகும்.
அஹமட் இர்ஷாட்
Post a Comment