Header Ads



சிலோன் தவ்ஹீத் ஜமாத் எனும் பெயரில் புதிய அமைப்பு உதயம் - SLTJ இரண்டாக பிளவு


ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்க்குள் ஏற்பட்ட மார்க்க மற்றும் நிர்வாக ரீதியிலான பிரச்சினைகள் காரனமாக SLTJயில் செயல்பட்ட 50க்கும் மேற்பட்ட கிளைகள் ஒன்றிணைந்து சிலோன் தவ்ஹீத் ஜமாத் (CTJ) என்ற பெயரில் புதிய அமைப்பை ஆரம்பித்துள்ளன.

இன்று மடவலை சன்சைன் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்ற தவ்ஹீத் ஜமாத்தின் விசேட பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட கிளை, மாவட்ட நிர்வாகிகள், அணிச் செயலாளர்கள், தாஈக்கள் ஒன்றிணைந்தே இந்த புதிய அமைப்பை தோற்றுவித்தனர்.

புதிய அமைப்பின் தேசிய தலைவராக சகோ. ரிஸான் (தமன்கடுவ) அவர்களும், பொதுச் செயலாளராக சகோ. அப்துர் ராசிக் அவர்களும், பொருளாலராக சகோ. ரஜய் அவர்களும், துணை தலைவராக சகோ. சில்மி ரசீதி மற்றும் துணை செயலாளர்களாக சகோ. ரிஸான் (தர்காடவுன்), சகோ. சஜாத் நத்வி, மற்றும் சகோ. ரஸ்மின் ஆகியோர் பொதுக்குழு உறுப்பினர்களினால் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டனர் - அல்ஹம்து லில்லாஹ்.

சிலோன் தவ்ஹீத் ஜமாத்தின் (CTJ) தலைமையகம் கொழும்பில் செயல்படும் என்றும் இன்றைய பொதுக்குழுவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஊடகப் பிரிவு : சிலோன் தவ்ஹீத் ஜமாத் (CTJ)

Cont: ‭+94 (77) 745 0926

14 comments:

  1. நிச்சயமாக மார்க்க ரீதியான பிரச்சினையாக இருக்காது பதவிக்கான பிரச்சினையாகவே இருக்கும்

    ReplyDelete
  2. (நபியே! அவர்களிடம்) “வேதத்தையுடையோரே!

    நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்;

    (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்;

    அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்;

    அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” எனக் கூறும்;

    (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்:

    “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!”

    என்று நீங்கள் கூறிவிடுங்கள்.

    (அல்குர்ஆன் : 3:64)
    www.tamililquran.com

    ReplyDelete
  3. பண நிர்வாகதில் இரண்டாக உடைந்தத

    ReplyDelete
  4. ஆச்சரியப்படுவதற்கில்லை ஏனெனில் இந்தப்பிளவு எதிர்பார்த்தது தான்.
    ஒற்றுமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர்கள் தான் சிறிலங்கா முஸ்லீம்கள்

    ReplyDelete
  5. மார்க்க ரீதியிலான பிரச்சினய்யா அல்லது பதவி மோகமா? இந்த இரண்டு கூட்டமுமே அவசரக்காரனுகள்.

    ReplyDelete
  6. They are good in dividing Muslim community..
    They feel proud in dividing .
    They now are divided into so many groups ..
    This is their version of Islam ..
    For a simple Hadith they would divided into so many groups ..
    For a simple wrong understanding they would divide ummah ..
    Look so many mosques are created for this division.

    ReplyDelete
  7. இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கூறு போட்டு பிரித்து வைத்ததன் பிண்ணாலும் சும்மா விடுவானா அழ்ழாஹ்

    ReplyDelete
  8. எமது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறியதன்பிரகாரம் முஸ்லிம்கள் 72 கூட்டங்களாக பிரிவார்கள் என்பது இந்த TJ இல் தான் என்று இப்பொழுது தோன்றுகின்றது.
    நாம் அறிந்த காலத்திலிருந்து இயக்கத்தில் பிரிவுகள், பிளவுகள் உண்டாகுவதை பார்க்கின்றோமே ஒழிய இயக்கத்தின் வளர்ச்சிகளை காணவில்லை.
    எந்தவொரு இயக்கமோ அல்லது நபரோ அல்லாஹ்வின் கட்டளைகள், தூதரின் போதனைகள் போன்றன மக்களை சென்றடையும் நோக்கத்தில் முயற்சிக்காமல் தத்தமது இயக்கத்தை வளர்க்கும் நோக்கில் முயற்சித்தால் நிச்சயமாக பிளவுகள் உண்டாகும்.
    மக்களின் ஹிதாயத்துக்காக எவர் முயற்சிக்கின்றாரோ அல்லாஹ் அவர்களை கண்ணியப்படுத்துவான், அதற்குரிய கூலிகளை இம்மையிலும் மறுமையிலும் வழங்குவான். அல்லாஹ் நம் அனைவரையும் பொருந்திக் கொள்வானாக.

    ReplyDelete
  9. @ Bawa, SLTJ is a fringe group. It does not represent the whole Muslims in Sri Lanka. Muslims in Sri Lanka are wholly represented by ACJU.

    ReplyDelete
  10. CTJ - If I join in this new group, what I can get. Please tell me.

    ReplyDelete
  11. Political party SLMC,ACMC,...
    ACTJ,SLTJ,UTJ,.....Now CTJ

    ReplyDelete
  12. பல குடும்பங்களை பிளவு படுத்தி ,சமூக சீரழவை செய்து விட்டு பிரிந்தார்கள். Alhamdulillah. நிச்சயமாக மார்க்க பிரச்சினை அல்ல. அரசியல் ஆசை சில உறுப்பினர்களுக்கு. தமிழ் நாட்டில் உறுவாக்கிய தலைவரைக்கூட துரத்தி அடிக்கப்பட்ட இயக்கம் இது.

    ReplyDelete

Powered by Blogger.