பாகிஸ்தான் தூதுவராக என்னை நியமிப்பதற்கு, ஆசாத் சாலியே காரணம் - NM சஹீட்
என்னை His Excellency ”ஹிஸ் எக்ஸலன்சி ”என்று அழைப்பதற்கும் பாகிஸ்தான் உயா் ஸ்தாணிகராக நியமிப்பதற்கும், தன்னிடம் அபிப்பிராயம் கேட்டு ஜனாதிபதியிடம் என்னை சிபாா்சு செய்தவா் கொழும்பு முன்னாள் மேயா் அசாத் சாலியாகும். சட்டத்தரணி என்.எம் சஹீட் தெரிவித்தாா்.
நேற்று (11) கொழும்பு 03 ல் உள்ள மரிணடா ஹோட்டலில் அகில இலங்கை முஸ்லீம் லீக்கின் வாலிப முன்ணனியின் தலைவா் டொக்டா் பாருக் தலைமையில் பாக்கிஸ்தான் துாதுவராகச் செல்ல உள்ள சட்டத்தரணி சஹீட்டுக்கு பாராட்டு வைபவம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனா். அவ் வைபவத்திலேயே சஹீட் மேற்கண்டவாறு தெரிவித்தாா்.
இவ் வைபவத்தில் முன்னாள் அமைச்சா் இம்தியாஸ் பாக்கீா் மாக்காா், என்.எம்.அமீன், உப்புக் கூட்டுத்தாபணத்தின் தலைவா் அமீன் , சட்டத்தரணி ரசீத் எம். இம்தியாஸ், சாம் நவாஸ், இஸ்மத், யாழ் ரஹீம், உட்பட பலரும் அவரது சேவைகள் குண நல பண்புகளைப் பகிா்ந்து கொண்டனா்.
அவா் அங்கு தொடா்ந்து உரையாற்றுகையில் -
எனது வாழ் நாளில் தனது முன்னேற்றத்திற்கும் மற்றும் எனது குடும்பம் இந்த அளவுக்கு உயா்வதற்கும் கார்ண கருத்தா்களாக இருந்தவா்கள் இருவா் -ஆவாா்கள். அதில் ஒருவா் முன்னாள் சபாநாயகா் பாக்கீா் மாக்காா், தன்னை அடையாளம் கண்டு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னியின் தலைவராக்கினாா். அதனால் என்னை முழு இலங்கையிலும் சென்று நான் சமுக சேவையில் அறிமுகமானேன்.
அதேபோன்று சட்டத்துறையில் தன்னை இந்த அளவுக்கு, அவரது மகன் போன்று என்னை இன்றும் பாா்த்துக் கொள்கின்ற ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவாகும். அவாிடம் அபிப்பிராயம் கேட்டுத்தான் பாக்கிஸ்தான் உயா் ஸ்தாணனிகா் பதவியையும் ஏற்றுக் கொண்டேன்.
அரசியல் ரீதியாக தன்னை அடையாளம் கண்டு தனக்கு சில பொறுப்புக்களை வழங்கியவா் காலம் சென்ற முஸ்லிம் காங்கிரஸ்த் தலைவா் எம்.எச்.எம் அஷ்ரப்.
அதேபோன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டு 7க்கும் மேற்பட்ட கூட்டுத்தாபனம், அதிகார சபைகளின் தலைவராக பதவி வகிப்பதற்கும் உதவியா் அமைச்சா் றிசாத் பதியுத்தீன் ஆகும்.
எனது 2 மகன் வெளிநாடுகளில் Orthopedic Surgeon வைத்தியத்துறையில் கடமையாற்றுகின்றனா். 3வது மகன் தற்பொழுது சட்டக் கல்லுாாியில் இறுதி ஆண்டில் கற்கின்றாா் ஒரே ஒரு மகள் தன்னுடன் வாழ்கிறாா்.
அநுராதபுரம் நாச்சியா தீவு எனும் கிராமத்தில் பிறந்து மன்னாா் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றேன். கொழும்புக்கு வந்து களனி பல்கலைக்கழகம், பட்டதாரியாகி ஜாமியா நளிமியா,சட்டக் கல்லுாாி, அதன் பின்னா் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தாவுடன் ஜூனியாராகி இன்றும் அவருடன் சோ்ந்து உயா் நீதிமன்ற வழங்குகளை ஆஜராகி வருகின்றேன்.
அந்த வகையில் முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் காலம் என்வாழக்கையில் மறக்க முடியாது இங்குள்ள ஒவ்வொருவரினதும் வாழ்க்கையில் நான் இல்லரக் கலந்து அனுபவித்த சம்பவங்கள் மறக்க முடியாது.
அத்துடன் எனது ஒவ்வொரு வெற்றிக்கும் உழைத்தவா் எனது மனைவியாகும்
காலம் சென்ற இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம் அஸ்வருடன் இனைந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவா்களின் இனைந்து றிசாத் பதியுத்தீன் அமைச்சருடன் முரன்பட்டேன் பின்னா் மீண்டும் அ.இ.மு.கா ங்்கிரஸ்இணைந்து கொண்டேன் என பாக்கிஸ்தான் உயா் ஸ்தாணிகராக செல்ல இருக்கும் சிரேஸ்ட சட்த்தரணி என். எம் சகிட் கூறினாா்.
அவருக்கு முஸ்லிம் லீக் வாலிப முன்னயின் நிர்வாகக் குழு கொள்ளுப்பிட்டி மரின்டா ஹோட்டலில் பாராட்டு வைபம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்த வேலையில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு அவா் தெரிவித்தாா்.
(அஷ்ரப் ஏ சமத்)
Post a Comment