ஹரிஸ் தூங்குகிறாரா..? கல்முனையை விட்டு ஓட்டம்பிடிக்கும் அரச அலுவலகங்கள்
கல்முனையில் இருக்கும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் உப அலுவலகம் இன்னும் சில வாரத்தில் கல்முனை நகரை விட்டு அம்பாறை நகர் நோக்கி செல்லவுள்ளதாக அறியமுடிகிறது
அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்திக்காக கல்முனையில் பல வருடமாக நகர அபிவிருத்தி அதிகார சபை தனது உப அலுவலகம் ஒன்றை அமைத்து மக்களுக்கு சேவை செய்து வந்துள்ளது அப்படியான அலுவலகம் அம்பாறை நகருக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ள செய்தி அறிந்த கரையோர மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்
நல்லாட்சி அரசாங்க ஆட்சி காலத்தில் கல்முனை நகரில் பல வருடமாக இயங்கி வந்த அரச அலுவலகங்கள் திட்மிட்டு அம்பாறை நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன இதனால் கரையோர மக்கள் பல சௌகரியங்களை அனுபவித்து வருவதை அம்பாறை மாவட்ட த்தின் அரசியல் அதிகாரத்தில் இருக்கும் முஸ்லிம் காங்கிரஸின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் கவனத்தில் கொள்ளாமல் இருப்பதால் தான் இந்த நிலை ஏற்படுகின்றன
கிழக்கின் தலைநகர் கல்முனை அதை அழகுபடுத்துவது கல்முனையில் இருக்கும் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் அவர்களின் கடமை யாக இருக்கும் போது மௌனமாக இருக்கின்ற அவர் செய்ய தெரியாத சிங்கமாக தேர்தல் காலங்களில் மட்டும் ஹக்கிமை அழகுபடுத்த மில்லியன் அபிவிருத்தி என்று மேடையில் கூறி மக்களை ஏமாற்றும் போது மக்கள் செல்வாக்கு அற்ற அவர்களை அரசாங்கம் ஏமாற்றுகின்றது என்பதை பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் அவர்கள் புரிந்துகொண்டு இனிமேலாவது கல்முனை நகரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதே போன்று கல்முனையில் இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் காரியலாயமும் அம்பாறைக்கு இடமாற்றம் செய்யாப்பட்டது அதையும் மாணிக்கமடு சிலைக்கும் ஒரு வாரத்தில் தீர்வு என்று ஹரிஸ் அவர்களின் தலைவர் றவூப் ஹக்கிம் மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து பல வருடம் ஆனால் இன்னும் தீர்வில்லை.
ஹரீஸ் ஹரீஸாக இருந்த போது மிக வீரியமாக செயற்படும் அரசியல்வாதியாக இருந்தார். எப்பொழுது தலைவருடைய கூஜாதூக்கியாக மாறினாரோ அன்றிலிருந்து கல்முனையின் அதிகாரங்களும் வழங்களும் சூரையாடப்பட்டுக்கொன்டே இருக்கின்றன.அவரும் மௌனியாகவே இருக்கின்றார். எல்லாம் நடந்து முடிந்த பின் ஓரிரு வீர வசனம் பேசுவார் பின்பு எல்லாம் முடிந்துவிடும். இதற்கு அவர் மட்டும் காரனம் இல்லை எமது பிரதேச மக்களும்தான். மக்களுடய உரிமையையும் மாணத்தையும் இந்த தலைமை பாதுகாக்காது என்று வெளியே வந்தால் மக்கள் தன்னை அரசியல் அனாதையாக்கிவிடுவார்களே! என்று ஒரு பயம்.
ReplyDelete