Header Ads



"நம்பகத்தன்மை மிகவும் மோசமடைந்து, வரும் நாடாக இலங்கை"

சர்வதேச ரீதியாக இலங்கை மற்றுமொரு பின்னடைவுக்கு முகங்கொடுத்துள்ளது. வர்த்தக ரீதியாக நம்பகத்தன்மை மிகவும் மோசமடைந்து வரும் நாடாக இலங்கை மாறியுள்ளதாக உலக புகழ் பெற்ற tradingeconomics என்ற வர்த்தக இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளை அடிப்படையாக கொண்டு இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது

அந்த அறிக்கைக்கமைய நூற்றுக்கும் மேற்பட்ட அலகுகள் இருப்பின் அது வர்த்தகத்திற்கு தகுதியான நாடு எனவும், நூற்றுக்கும் குறைவான அலகுகள் இருப்பின் அது வர்த்தகத்திற்கு தகுதியற்ற நாடாகவும் பெயரிடப்படுகின்றது.

2015ஆம் ஆண்டிற்கு முன்னர் வரை136 அலகுகளை கொண்ட நாடாக இலங்கை காணப்பட்டுள்ளது.

ஆனால் தற்போதைய நிலவரப்படி அது 78 அலகாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்கமைய இலங்கை வர்த்தகத்திற்கு தகுதியற்ற நாடாக பெயரிடப்பட்டுள்ளது.

சமகாலத்தில் அமெரிக்க டொலருக்கு இணையான ரூபாவின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டு வரும் நிலையில், இந்த தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.