Header Ads



சிலோன் தவ்ஹீத் ஜமாத், நிறைவேற்றியுள்ள தீர்மானங்கள்

23.09.2018 அன்று மடவளை சன்சைன் மண்டபத்தில் நடைபெற்ற சிலோன் தவ்ஹீத் ஜமாத்தின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

TNTJவை விட்டு SLTJ நிரந்தரமாக நீங்கும் வரை தனித்து செயல்படுதல்.

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என்பதுடன் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட அனைவரும் மீண்டும் அமைப்பில் இணைக்கப்படுவதுடன் அமைப்பின் மார்க்க மற்றும் நிர்வாக செயல்பாடுகள் தொடர்பில் தற்போதைய நிர்வாகம் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் இரு தரப்பினரும் ஆதரங்களை சமர்பித்து தம் பக்க நியாயத்தை நிரூபிக்கும் விதமாக பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும்  அதுவரை (23.09.2018) விசேட பொதுக்குழுவில் கலந்துகொண்ட கிளைகள் புதிய பெயரில் தனித்து வீரியமாக கொள்கை பிரச்சாரத்தை முழு மூச்சுடன் முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.

CTJ எனும் புதிய பெயரில் செயல்படுதல்.

இதுவரை காலமும் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் என்ற பெயரில் செயல்பட்டு வந்த கொள்கை சகோதரர்கள் இனிவரும் காலங்களில் சிலோன் தவ்ஹீத் ஜமாத் (CTJ) எந்த பெயரில் ஏகத்துவ பிரச்சாரத்தையும், சமுதாயப் பணிகளையும் இன்னும் வீரியமாக முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.

எந்த வெளிநாட்டு இயக்கத்தின் கீழும் செயல்படுவதில்லை.

இயக்க ரீதியில் அமைப்பின் செயல்பாடுகளை  தலைமை நிர்வாகம், ஆலோசனை சபை, மற்றும் தணிக்கை குழு ஆகிய மூன்று மட்ட நிர்வாகம் மூலம் முன்னெடுக்கப்படும் என்பதுடன் எந்தவொரு வெளிநாட்டு அமைப்புகளின் கீழும் நிர்வாக ரீதியில் கட்டுப்பட்டு செயல்படும் அமைப்பாக இவ்வமைப்பு இருக்காது என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

ஜமாத்தின் செயல்பாடுகளை வெளிநாடுகளில்  முன்னெடுக்கும் விதமாக தேவைக்கேற்ப அமைப்பின் கிளைகள் வெளிநாடுகளில் உருவாக்கம் செய்யப்படும்.

பைலா மாற்றம் கொண்டுவருதல்.

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் என்ற பெயரில் செயல்பட்ட நேரத்தில் பயன்பாட்டில் இருந்த அமைப்பு விதி (By Law) யில் பல்வேறுபட்ட சிக்கள்களும், குழப்பங்களும் கிளை, மற்றும் மாவட்ட நிர்வாகங்கள், பிரச்சாரகர்கள் உள்ளிட்டவர்களினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள காரனத்தினால், புதிய அமைப்பு விதியை கிளை, மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் பிரச்சாரகர்களின் ஆலோசனைகளை எழுத்து மூலம் பெற்று மீண்டும் உருவாக்குவது என்றும், புதிய அமைப்பு விதி உருவாக்கப்பட்ட பின் மீண்டும் பொதுக்குழு கூட்டப்பட்டு பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலுடன் அது அமைப்பின் சட்டமாக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தனியார் சட்டம் முறைப்படி இறுதி செய்யப்பட வேண்டும்.

இலங்கை முஸ்லிம் தனியார் சட்டத்தில் மார்க்க ரீதியிலான முறையான திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று கோரிக்கை பல வருடங்களாக இருந்து வரும் நிலையில், ஆளும் அரசு GSP+ வரிச் சலுகையை காரணம் காட்டி தேவையற்ற திருத்தங்களுக்கு முனைப்புக்காட்டியது. 

வெளிநாடுகளின் தேவைகளுக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதை இலங்கை முஸ்லிம்கள் எதிர்த்த அதே வேலை, மார்க்க ரீதியில் முறையான திருத்தம் வேண்டியும் கோரிக்கை விடப்பட்டது. 

முஸ்லிம் தனியார் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மார்க்க அடிப்படையிலான திருத்தங்கள் பற்றிய பரிந்துரைகள் அனைத்து தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட நிலையிலும் இதுவரை திருத்தம் இறுதி செய்யப்படாமல் இழுபறி நிலையே காணப்படுகிறது.

முஸ்லிம் தனியார் சட்டம் உடனடியாக மார்க்க அடிப்படையில் முறையான திருத்தம் செய்யப்பட்டு இறுதி செய்யப்படுவதுடன் எவ்விதமான மார்க்க முரணான செய்திகளும் அதில் உள்ளடங்கப்படக் கூடாது என்றும் இப்பொதுகுழு தீர்மானிக்கிறது.

முஸ்லிம்கள் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு எதிராக உடன் நடவடிக்கை வேண்டும்.

இலங்கை முஸ்லிம்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தேவையற்ற குழப்பங்களுக்கு சிலர் வித்திட்டு வருகின்றனர். புனர் வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலி இயக்கத்தை சேர்ந்த இன்பராசா என்பவர், முஸ்லிம் அரசியல் வாதிகளிடம் ஆயுதம் இருப்பதாகவும், அதன் மூலம் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் ஆதரமற்ற குற்றச்சாட்டை ஊடகங்களில் முன்வைத்திருந்தார். இன்பராசா என்பவருக்கு எதிராக பல்வேறு தரப்பினராலும் பொலிசில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்ட போதிலும் இதுவரை அவருக்கு எதிரான எந்த விதமான சட்ட நடவடிக்கைகளையும் பாதுகாப்பு துறை மேற்கொள்ளாமலிருப்பதை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிப்பதுடன், இன்பராசா மீது ICCPR இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இப்பொதுக்குழு வேண்டிக்கொள்கிறது.


ஊடக பிரிவு: சிலோன் தவ்ஹீத் ஜமாத் (CTJ)

9 comments:

  1. Takleed on PJ ?

    Even after Indian members realized ... Still Srilankan members do blindly follow PJ.

    ReplyDelete
  2. We Muslim in Srlanka.. Belive the hadees on Sihir as appeared in Saheeh hadees and in Quran in a way it was belived by Salafus saliheens and Imaams and Ahlus Sunnah scholars till today.

    For these TNTJ, SLTJ ... we are considered to be Non-Muslim.

    So What is the position of new shoot out CTJ ?

    If they consider us non muslim due to above established issue... Why still try to join our general issues and comment on it.

    1st think they have to do is ... to understand their mistake and turn back to call us MUSLIMS... Then we will spend time to listen to them.

    ReplyDelete
  3. Owe need some more...seylan TJ.. thambapanni TJ...etc

    ReplyDelete
  4. These salafi groups are groups of fitna.saudi exported them and look at how Saudi deal with their clerics ..
    They kill them and they put them in jails ..
    Do not follow these radicals and they will bring destruction to all to humanity ...

    ReplyDelete
  5. Dear Rasheed, You must learn and understand thoroughly any issue before you comments deeply...
    Hope you read, listen and watch all then realize...

    ReplyDelete
  6. It does seem to me We Muslims devide each other in the name of Thawheeth, Salafi and so on & on & on. Laymen Muslims are confused & unnecessarily fight each other. May we all ask our Rabbul Aalameen bless us with Hidhayath starting from ourselves rather blaming on others!!!

    ReplyDelete
  7. இஸ்லாத்தில் ஒற்றுமை முக்கியம் , -ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு அமைப்புக்குள் இவளவு பிரிவுகளா ? தொழுகைக்காக நின்றால் வரிசை நுணுக்கமாக பேணுவார்கள் , காரணம் சமூகத்தில் பிளவு வரக்கூடாதென்று -- இந்த அமைப்பை போல் வேகமாக பிரிந்த இஸ்லாமிய இயக்கங்கள் இல்லை , இவர்களால் - தவறு காணும் சில இயக்கம் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தலைமை துவத்தில் இன்னமும் கட்டுக்கோப்பாக இருக்கிறது எங்கோ தவறு நடக்கிறது இனியும் பிரிவு வேண்டாமே .

    ReplyDelete
  8. "இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;

    நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;

    அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;

    நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து;

    அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;

    இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்;

    அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் -

    நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்."

    (அல்குர்ஆன் : 3:103)

    அடி பட்ட பின்  அழுது  தொழுது  இணைவதை  விடவும்
    படித்துப் படித்துக் கூறும் - பாரெல்லாம் படைத்தவனின்
    போதனையைப் பண்பாய்ப் பேணுவதே அதி விவேகம்!

    ReplyDelete

Powered by Blogger.