களுபோவில வைத்தியசாலையில், இப்படியும் நடந்தது
களுபோவில வைத்தியசாலையில் குழந்தை பெற்றெடுத்த போதைப் பொருளுக்கு அடிமையான பெண்ணொருவர் குழந்தையை கைவிட்டு விட்டு ஓடிய சம்பமென்று இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், குறித்த பெண் இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் மருத்துவமனையில் இருந்தபோது கடந்த 26ம் திகதி கொஹூவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
குறித்த பெண் கடந்த 24ம் திகதி அதிகாலை 2 மணியளவில் களுபோவில பொது வைத்தியசாலை 21வது வார்டில் (இரண்டாவது மாடி) மூன்று பெட்சீட்டை ஒன்றாக சேர்த்து முடிந்து அதை ஜன்னல் அருகில் உள்ள கம்பியில் கட்டி கீழே இறங்கி தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக குறித்த பெண்ணை தேடி பொலிஸார் அவர் வசிப்பதாக தெரிவித்த நுகேகொட பிரதேசத்திற்கு சென்று பார்த்துள்ளனர். எனினும் அவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
இதற்கிடையில், 33 வயதான இந்த தாய் 26ம் திகதி இரத்த போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவேளை கைது செய்யப்பட்டதாக களுபோவில மருத்துவமனை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பெண்ணால் பெற்றெடுக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேக நபரான பெண் வைத்தியசாலையில் இருக்கும் போது நேற்று நுகேகொட நீதவான் நீதிமன்ற நீதிபதி கடுமையாக எச்சரித்து பிணையில் செல்ல உத்தரவிட்டார்.
சந்தேக நபரின் கணவர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பெண் வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளன.
கொஹூவல பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.
Post a Comment