இலங்கையில் தாடி வளர்ப்போருக்கான சங்கம் உருவாக்கம் - மகிழ்ச்சி கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இலங்கையில் தாடி வளர்ப்போருக்கான சங்கமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இவ்வாறான ஓர் சங்கம் உருக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த தாடி வளர்த்த பதினைந்து இளைஞர்கள் அண்மையில் ஒன்றுகூடியுள்ளனர். கம்பஹா பிரதேசத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த இளைஞர்கள் ஒன்று கூடலில் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இவர்களில் சிறந்த தாடி உடையவர் யார் என்பதை தெரியும் போட்டியொன்றும் நடத்தப்பட்டுள்ளது.
தங்களது தாடியை பேணிப் பாதுகாத்துக் கொள்வதற்காக அர்ப்பணிப்புடன் இந்த இளைஞர்கள் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாடி வளர்த்த இளைஞர்கள் பல்வேறு ஆடைகளில் தோன்றி புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்துள்ளனர்.
இந்தியாவின் கேரள மாநிலத்திலும் இவ்வாறான தாடி வளர்ப்போர் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ReplyDeleteநபி (ஸல்) அவர்கள் மீசையை ஒட்ட நறுக்குமாறும் தாடியை வளர்க்குமாறும் கட்டளையிட்டார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 2. தூய்மை
ஹதீஸ் எண் 433
www.jaffnamuslim.com/hathees
நீண்ட தாடி கொண்டோரையும் உயர்ந்த பரிசுகளுக்கு உரியவர்களாக ஆக்கலாம்.
அது, ஆண்மையும் ஆரோக்கியமும் நிறைந்த சமுதாயம் ஒன்றைக் கட்டி எழுப்ப துணை புரியும்.
Is it a news??
ReplyDelete