வடமாகாண சபையின் பின்னடைவுகளுக்கு, ரொட்டித்துண்டுகளைக் காட்டி அறநிலை மறந்த அவையினரே காரணம்
தற்போதைய தலைமைகள் போய், மாற்றுத் தலைமை உதித்தால் மீண்டும் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக களமிங்குவதற்கு சாத்தியும் உள்ளது எனத் தெரிவித்த வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்,
வடமாகாண சபையின் ஒருசில பின்னடைவுகளுக்கு அரசியல் ரொட்டித்துண்டுகளைக் காட்டி அறநிலை மறந்த அவையினர் சிலரே காரணம். அவ்வாறு இருந்தும் எமது செயற்பாடுகள் செவ்வனே இருந்தன என்றும் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் மாதம் 25 ஆம் திகதியுடன் வடமாகாண சபையின் முதலாவது ஆயுட்காலம் நிறைவுக்கு வரவுள்ள நிலையில் அடுத்தகட்ட செயற்பாடுகள் குறித்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
மேலும் முதலமைச்சர் பதவி முடிவுக்கு வந்ததும் தமிழ் மக்கள் பேரவையின் நடவடிக்கைகளில் கூடிய கவனம் செலுத்துவேன். கட்சிகளிலும் பார்க்க மக்களை ஒன்றிணைத்து எமது மக்களின் தேவைகளை உலகிற்கு எடுத்துக் கூற என்னால் முடிந்தவற்றை செய்வேன் என்று விக்கினேஸ்வரன் இதன்போது தெரிவித்தார்.
விக்கினேஸ்வரன் ஐயா அவர்களே,
ReplyDeleteநீங்கள் நீதித்துறையில் இருந்து வந்ததால் எல்லாவற்றையும் நேர்மையான கண்ணோட்டத்தோடு பார்ப்பது தவறு. அரசியல் என்பது வேறு. அது ஒரு சாக்கடை. அந்த சாக்கடையில் ஊறிப்போனா சம்பந்தன், சுமந்திரன் அவர்களால் ராஜதந்திர ரீதியாக முனகர்த்த முடியும். நீங்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி ஒரு பொது புள்ளியில் சகல தமிழ் கட்சிகளையும் அமைப்புகளையும் இணங்க சேயும் செயட்பாட்டில் இறங்கினால் நல்லது. நேர்மையாக இருப்பவர்கள் அரசியலுக்கு லாயக்கு அற்றவர்கள். நீங்கள் கட்சிகளை தாண்டி ஓர் கொள்கை புரட்சியை முன்னெடுத்தீர்களானால் அதில் நூறு வீதம் வெற்றி பெறுவீர்கள்.