அமித் வீரசிங்கவை கைதுசெய்ய, ரோகின்ய அகதிகளை காப்பாற்ற நானே உதவினேன் - நாமல் குமார
கண்டி – திகன பகுதியில் இடம்பெற்ற வன்செயல்களுடன் தொடர்புபட்ட மஹசொன் பலகாயவின் அமித் வீரசிங்க உட்பட்டவர்களைக் கைது செய்ய பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வாவுக்கு நானே ஒத்துழைப்பு வழங்கினேன். இதேபோன்று ரோஹிங்ய அகதிகளை கல்கிசையில் தாக்கியவர்களைக் கைது செய்வதற்கும் நானே உரிய தகவல்களை வழங்கினேன். இதற்காக பொலிஸ் திணைக்களம் அன்பளிப்பாக எனக்கு 5 இலட்சம் ரூபா வழங்கியது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ ஆகியோரின் கொலை, சதித்திட்டம் தொடர்பில் தகவல் வெளியிட்ட ‘ஊழலுக்கு எதிரான படை’ அமைப்பின் பணிப்பாளர் நாமல் குமார இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிங்கள நாளிதழுக்கு வழங்கிய பேட்டியொன்றிலேயே அவர் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார். அவர்மேலும் தெரிவித்துள்ளதாவது;
ரோஹிங்ய அகதிகளான புகலிடக் கோரிக்கையாளர்கள் கல்கிசையில் வைத்துத் தாக்கப்பட்டார்கள். இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களான அரம்பேபொல ரத்னசார தேரர், சிந்தக சஞ்சீவ, டேன் பிரியசாந்த, ஜனித மினிபே ஆகியோரைக் கைதுசெய்ய பொலிஸார் என்னிடம் உதவி கோரினார்கள். நான் ஆரம்பத்தில் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு நல்கவில்லை என்றாலும் தேசிய பாதுகாப்பு கருதி நான் பொலிஸாருக்கு உதவி செய்தேன். நான் வழங்கிய தகவல்களின்படி இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கண்டி– தெல்தெனிய வன்செயல்களினையடுத்தும் இவ்வாறே என்னிடம் உதவி கோரப்பட்டது. நான் மஹசொன் பலகாய அமித் வீரசிங்கவை நன்கு அறிவேன் என்பது பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவுக்குத் தெரியும். இது தொடர்பில் அவர் என்னிடம் உதவி கோரினார். நான் அமித் வீரசிங்க உட்பட்ட சிலரைக் கைது செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கினேன்.
பொலிஸாருக்கு நான் ஒத்துழைப்பு வழங்கியதற்காகவும் தகவல்கள் தெரிவித்ததற்காகவும் எனக்கு 2 ½ இலட்சம் ரூபா வீதம் 5 இலட்சம் ரூபா பொலிஸாரால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
நான் வெளியிட்ட கொலைச் சதிமுயற்சி தொடர்பான தகவல்களையடுத்து எனது உயிருக்கு தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. யார் மூலம் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படப் போகிறது என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. பொலிஸ் பாதுகாப்புக் கோரி பொலிஸ் மா அதிபரிடம் என்னால் செல்ல முடியாது. நான் ஜனாதிபதியிடமே எனக்குப் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ARA.Fareel
உனக்கு என்ன தேவையில்லாத வேலை இதுவெல்லாம்.நேர்மையற்ற வேலையினால் இப்போது அமைதியற்ற வாழ்க்கை.
ReplyDeleteWeldone
ReplyDeleteGod almighty may save you, dont afraid
ReplyDeleteவசீம் கொலை வழக்கில் தான் சிக்கி விடக்கூடாது என்று போடும் திட்டங்களில் இதுவும் ஓன்று
ReplyDeleteதந்தையும் தனயனும் சிறிய தந்தையரும் சேர்ந்து எம் முஸ்லீம் சமூகத்திட்க்கு இழைத்த கொடுமைகளின் வெளிப்பாடு தான் இந்த கொலைமிரட்டலாக இருக்கலாம்- அதட்க்காக கைது செய்ய உதவினேன் ஆதலால்தான் எனக்கு இது என்று மொட்டந்தளைக்கு முடிச்சி போடும்.
நடவடிக்கை வேணாம் சகோதரா. முஸ்லீம் சமூகம் இன்னும் விழிக்கவில்லை இன்னும் விழிக்கவில்லை -அதனாலதான் உங்கள் பின்னாலும் சில முஸ்லீம் ஓநாய்கள்-நன்றி