Header Ads



வசீம் வழக்கை, முடிவுக்கு கொண்டு வருமாறு உத்தரவு - நீதிபதியும் அதிருப்தி


ரக்பி வீரர் வசீம் தாஜுடீனின் கொலை தொடர்பான விசாரணைகள் தாமதமாவதையிட்டு அதிருப்தி தெரிவித்த கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் இசுறு நெத்திகுமார உடனடியாக இந்த வழக்கின் விசாரணைகளை முடிவுக்கு கொண்டு வருமாறு சீ.ஐ.டி.யினருக்கு உத்தரவிட்டார்.

2012 இல் ஆரம்பமான இந்த விசாரணையின் முன்னேற்றம் குறித்து, நீதிமன்றம் திருப்தியடைய முடியாமல் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நடந்துவரும் விசாரணைகளில் தாமதம் ஏற்பட்டதற்கான காரணங்களை விளக்கி நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை தாக்கல் செய்யுமாறு மேலதிக மாஜிஸ்திரேட் நீதவான் மேலும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் இவ் வழக்கின் சந்தேக நபர்களான முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க முன்னாள் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க பெரேரா மற்றும் முன்னாள் கொழும்பு பிரதான வைத்திய அதிகாரி பேராசிரியர் ஆனந்த சமரசேகர ஆகியோரைப் பற்றிய சாட்சியங்களின் தொகுப்பொன்றை தாக்கல் செய்யுமாறு சீ.ஐ.டி பிரிவினர் கேட்கப்பட்டிருந்தனர்.

இதற்கு பதிலளித்த பிரதி சொலிஸ்டர் ஜெனரல் திலான் ரட்நாயக்க குறிப்பிட்ட கொலைச் சம்பவம் 2012 இல் இடம்பெற்ற போதிலும் 2015 ஆம் ஆண்டிலேயே சீ.ஐ.டியினர் இந்த கொலை சம்பவம் பற்றி அதிகாரபூர்வ விசாரணைகளை ஆரம்பித்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.